கடந்த மே 5ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. மாணவர்கள் இதனை தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளமானwww.ntaneet.nic.in இணையதளத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5ம் தேதி நடைபெற்றது. இதற்காக மொத்தம் 154 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. மொத்தம் 15 லட்சத்து 19 ஆயிரத்து 375 மாணவர்கள் நீட் தேர்வுக்கு பதிவு செய்திருந்தனர்

இந்நிலையில், நீட் தேர்வுக்கான விடைகள் தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது. இதனைwww.ntaneet.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். விடைகளில் ஏதேனும் திருத்தங்கள் இருந்தால், அதற்கு விண்ணப்பிக்கலாம். விடை திருத்தத்திற்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். நாளை இரவு 11.50 மணிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, விடைத்தாள் திருத்ததிற்கு ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். ஒரு வேளை மாணவர்கள் குறிப்பிட்டுள்ளது போல், விடையில் பிழை இருப்பின் விண்ணப்பக் கட்டணம், அவரது வங்கிக் கணக்கிற்கே திருப்பி செலுத்தப்படும். இதனைப் பற்றி முழுமையான விபரங்களுக்கு தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

ஆன்லைனில் நீட் விடை குறிப்புகள் பெறும் வழி முறை:
படி 1: www.ntaneet.nic.in என்ற இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்
படி 2: விண்ணப்ப பதிவு எண், கடவுச் சொல் ஆகியவற்றை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும்
படி 3: அப்ளே கீ சேலஞ்ச் என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும்
படி 4: இயற்பியல், வேதியியல், உயிரியியல், ஆகிய பாடங்களின் வினா விடைகள் அதில் வழங்கப்பட்டிருக்கும்
படி 5: ஏதேனும் விடையில் பிழை இருப்பின், அதனை கிளிக் செய்து முறையிடு செய்யலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here