மதுரை மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் நிர்ணயம் விபரம் குறித்து எமிஸில் (கல்வி மேலாண்மை தகவல் தொகுப்பு) பதிவேற்றம் செய்யும் பணி நேற்று துவங்கியது.முதன்மை கல்வி அலுவலகத்தில் சி.இ.ஓ., சுபாஷினி தலைமை வகித்தார். டி.இ.ஓ.,க்கள் அமுதா, முத்தையா, இந்திராணி, மீனாவதி, சி.இ.ஓ.,யின் நேர்முக உதவியாளர் சின்னதுரை மற்றும் அரசு மேல்நிலை, உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் 147 பேர் பங்கேற்றனர்.அரசு பள்ளிகளில் 1.8.2018ன்படி 40:1 விகிதாசாரம் அடிப்படையில் மாணவர் – ஆசிரியர் நிர்ணயம், உபரி ஆசிரியர் விபரம், உபரி ஆசிரியரில் ஜூனியர், சீனியர் விபரம், அரசு பள்ளிக்கு சொந்தமான நிலம், கட்டடம் உள்ளிட்ட விபரங்கள் எமிஸில் பதிவேற்றம் செய்யப்பட்டன. கல்வி துறையில் உபரி ஆசிரியர் கணக்கெடுப்பில் முதல்முறையாக சீனியர் ஆசிரியர் விபரம் சேகரிக்கப்பட்டுள்ளது.

மே 30க்குள் தொடக்க பள்ளிகளின் மாணவர்- ஆசிரியர் நிர்ணய விவரமும் எமிஸில் பதிவேற்றம் செய்யப்படவுள்ளது

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here