🔬📽📡🧬⏳🔭📹📹📺🔭🔦
*தினம் ஒரு அறிவியல்*
பல் பெரும்பாலான முதுகெலும்பி வகையான விலங்குகளின் தாடையில் காணப்படுகிறது.
பற்களின் முதன்மைப் பயன்பாடு உணவைக் கிழித்து, விறாண்டி, சப்பி உண்பதாகும்.
சில விலங்குகளுக்குப் பற்கள் தாக்கும் ஆயுதமாகவும் சிலவற்றிற்கு தற்பாதுகாப்புக்கும் பயன்படுகின்றன.
*பல் வேர்கள் முரசினால் மூடப்பட்டுள்ளன.*
மனிதர்களுக்கு இருமுறை பற்கள் முளைக்கின்றன. பாற்பற்கள் (பால் பற்கள்) ஆறு மாதத்தில் முளைக்கத் தொடங்குகின்றன. சில குழந்தைகள் பற்களுடன் பிறப்பதுண்டு.
*சுறாக்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை புதிய பற்கள் முளைக்கின்றன.*
*பல் வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.*
*பற்கள் கால்சியம் தாதுவால் ஆனவை.*
மனிதரின் பற்கள் முகத்தின் கீழ்ப்பக்கம் இருக்கும் மேற்தாடை எலும்பான அனுவென்பிலும், கீழ்த்தாடை எலும்பான சிபுகவென்பிலும் விளிம்புகளில் இருக்கும் சிற்றறைகளில் இறுக்கமாகப் பொருத்தப்பட்டிருக்கும்.
இவற்றில் நிலையற்ற விழுந்து முளைக்கும் பாற்பற்கள், நிலையான பற்கள் என இரு வகையுண்டு.
குழந்தை பிறக்கும்போதே இந்தப் பற்கள் முதிர்ச்சியடையாத நிலையில் தாடை என்புகளினுள் பொதிந்திருக்கும்.
மனிதரில் மொத்தம் 32 பற்கள் காணப்படும். இவற்றில் மேற்தாடையில் இடப்புறம் 8 பற்களும், வலப்புறம் 8 பற்களும் இருக்கும்.
இதேபோல் கீழ்த்தாடையிலும் இரு புறமும் எட்டு, எட்டாக மொத்தம் 16 பற்கள் காணப்படும்
வெட்டும் பற்கள்
கோரை பற்கள் கடைவாய் பற்கள்
முன் கடைவாய் பற்கள்
என நான்கு வகையுண்டு…
🌈📡🔬🛶⏳☂️🔭♻️
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
9578141313
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*