சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர்அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் பாதுகாவலர், சமையலர் உள்ளிட்ட தாற்காலிகப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட ஆட்சியர் எஸ். நாகராஜன் தெரிவித்துள்ளார். 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் மதுரையில் செயல்படும் அரசினர் கூர்நோக்கு இல்லத்துக்கு தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பாதுகாவலர், காவலர், வாயிற்காவலர், சமையலர், தொழில் பயிற்சியாளர், செவிலிய உதவியாளர் ஆகிய பணியிடங்களில் தகுதியானவர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்

இப்பணியிடங்களுக்கான விண்ணப்பம் உள்ளிட்ட தகவல்களை, மதுரை மாவட்ட இணையதளத்திலிருந்து (w‌w‌w.‌m​a‌d‌u‌r​a‌i.‌n‌i​c.‌i‌n) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், எண்: 91, அசோக் நகர் 3-ஆவது தெரு, அஞ்சல் நகர், மதுரை-18 என்ற முகவரிக்கு, ஜூன் 7 ஆம் தேதிக்குள் வந்து சேரவேண்டும் என அதில் தெரிவித்துள்ளார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here