சென்னை:தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:மார்ச்சில் நடந்த, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகள் மற்றும், பிளஸ் 1, அரியர் தேர்வுக்கான முடிவுகளுக்கு பின், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது.மறு கூட்டல் கோரி, விண்ணப்பித்தோருக்கு, அதன் முடிவுகள், இன்று பகல், 2:00 மணிக்கு வெளியிடப்படுகின்றன.மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண்கள், scan.tndge.in என்ற, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அவர்கள், தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை,www.dge.tn.nic.in என்ற, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம். பதிவு எண் இல்லாதவர்களுக்கு, மதிப்பெண் மாறவில்லை என, எடுத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here