25% இடஒதுக்கீடு: மே 29,30ல் மாணவர் சேர்க்கை

அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டத்தின்படி 25%இட ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் விண்ணப்பித்த ஏழை மாணவர்களின் விண்ணப்பங்கள் வரும் 28, 29 தேதிகளில் மாணவர் சேர்க்கை நடத்த தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். 

நடப்பு கல்வி ஆண்டில் ஏழை மாணவர்களுக்கு 25% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான உத்தரவை மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் 2019 ஏப்ரல் 22 முதல் 2019 மே 5-ம் தேதி வரை வரை இணைய வழியில் விண்ணப்பித்துள்ளனர்.

விண்ணப்பிக்கும் பள்ளிக்கும் குழந்தை வசிக்கும் இல்லத்திற்கும் 1.கீலோ மீட்டர் தொலைவு இருக்க வேண்டும். ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் 25% இட ஒதுக்கீட்டிற்கான இடங்களை அடுத்த மாதம் 10-ம் தேதி தங்கள் பள்ளி தகவல் பலகலையில் அறிவிக்க வேண்டும் என்பது போன்ற விதிகள் ஏற்கனவே உள்ளன.

அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் முன்னிலையில் ஆன்லைனிலேயே மாணவர் சேர்க்கை நடக்கும். கூடுதல் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள பள்ளிகள் குலுக்கல் முறையில் மாணவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் கண்ணப்பன் குறிப்பிட்டுள்ளார். 

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here