🔬🦠🧪📽📡🧬⏳🔭📹📺🔭🔦

*தினம் ஒரு அறிவியல்*

🦋🦋🦋🦋🦋🦋🦋🦋
தைராய்டு என்பது ஒரு சிறிய சுரப்பி. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும்.
🍓🍓🍓🍓🍓🍓🍓
இது கழுத்தின் கீழ்ப்பகுதியின் மையத்தில் அமைந்திருக்கும்.
🐉🐉🐉🐉🐉🐉🐉
உடலில் ஏற்படும் வளர்சிறை மாற்றங்களைக் கட்டுப்படுத்த இந்த தைராய்டு சுரப்பி, தைராய்டு என்ற ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.
🗞🗞🗞🗞🗞🗞🗞
இது *உடலில் உள்ள திசுக்கள், செல்கள், மூளை இதயம் போன்றவை இயங்குவதற்கு உதவியாக இருக்கிறது. இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மே 25ம் தேதி உலக தைராய்டு தினம்* கடைபிடிக்கப்படுகிறது.
🔮🔮🔮🔮🔮🔮🔮
உலக அளவில் ஆண்களை விட, பெண்கள் தான், இந்நோயினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இளம் பெண்களும் பாதிக்கப்படுகின்றனர்.
🕯🕯🕯🕯🕯🕯🕯🕯
தைராய்டு நோய்களை, தைராய்டு குறைநிலை நோய், மிகைநிலை நோய், கழுத்து கழலை நோய் மற்றும் தைராய்டு புற்றுநோய் என நான்கு வகையாக பிரிக்கலாம்.
🌻🌼🌻🌼🌻🌼🌻🌼
நமது சுவாசக் குழலின் முன் வெளிப்பகுதியில் ஒட்டிக் காணப்படுகின்றன.
🦐🦑🦐🦑🦐🦑🦐🦑
இவற்றில் தைராக்ஸின் என்ற ஹார்மோன் சுரக்கின்றது.
🦀🦀🦀🦀🦀🦀🦀🦀
தைராக்ஸின் சுரத்தலின் பற்றாக்குறை ஹைப்போ தைராய்டிஸம் ஆகும்.
🐟🐟🐟🐟🐠🐠🐠🐠
அயோடின் குறைபாட்டால் எளிய காய்டர் (முன் கழுத்துக் கழலை) தோன்றும்.
🍄🍄🍄🍄🍄🍄🍄
குழந்தை பிறக்கும்போதே
தைராக்ஸின் பற்றாக்குறையால் கிரிட்டினிஸம் என்னும் நோய் தோன்றும்.
🐋🐋🐋🐋🐋🐋🐋🐋
பெரியவர்களுக்கு மிக்ஸிடிமா என்னும் நோய் தோன்றும்.
🐊🐊🐊🐊🐊🐊🐊🐊
தைராக்ஸின் அதிகரித்தால் ஹைபர் தைராய்டிஸம் (அ) தைதோடாக்ஸிகோஸி.
(அ) எக்சோப்தால்மிக் காய்டர் (அ) கிரேவின் நோய்.
விழிப்புணர்வுடன்
செயல்படுவோம்

🌈📡🔬🛶⏳☂️🔭♻️
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
9578141313
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here