#வெறும்வயிற்றில்_இவற்றை #சாப்பிட்டால்_உங்கள்_உடலுக்குஆபத்து ….
வெறும் வயிற்றில் சாப்பிடுவது நம் உடலில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்துவதால் அதன் மீது நாம் கவனத்தை செலுத்தவேண்டும்.

நாங்கள் உங்களுக்காக வெறுவயிற்றில் சாப்பிட்டால் தீங்கு விளைவிக்கும் 5 உணவு பொருட்களை வரிசைப்படுத்தியுள்ளோம். முடிவில் போனஸ் பாயின்ட் ஒன்று கொடுத்துள்ளோம் , தவறவிட்டுவிடாதிர்கள்.

5.வெறும் வயிற்றில்

காபி குடித்தல்

காபி காலையில் எழுந்தஉடன் குடித்தால் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

அறிவுரை: காபி குடிப்பதை காலையில் தவிர்க்க முடியாவிட்டால் பால் அல்லது கிரீம் கொண்டு அதை சாப்பிடலாம்: பால் கொழுப்பு எதிர்மறை விளைவுகளை குறைக்கும்.

4. வெறும் வயிற்றில் மது குடித்தல்

சாப்பிடாமல், ஆல்கஹால் அருந்தினால் கல்லீரல், இதயம் மற்றும் சிறுநீரகங்களுக்கு எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

3. சுவி கம் சாப்பிடுதல்

சுவிங்கம் மெல்பவர்கள் அதிகம் பழம் மற்றும் காய்கறிகளைக் காட்டிலும் ஜங் உணவுகளான (பிரஞ்சு பொரியல், சாக்லேட்) ஆகியவற்றை அதிகம் விரும்புகிறார்கள் என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அறிவுரை: நன்கு சாப்பிட்டு இருந்தாலும் 10 நிமிடங்களுக்கு மேல் சுவிங்கம் மெல்வதை தவிர்க்கவேண்டும்.

2. தீவிர உடற் பயிற்சி மேற்கொள்ளுதல்

வெற்று வயிற்றில் உடற்பயிற்சி செய்வது அதிக கலோரியை எரிக்கும் என்று ஓர் கருத்து உள்ளது. உண்மையில், அது கொழுப்பை குறைக்காது. தசை இழப்பு தான் ஏற்படும்.தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வதால் உடலில் உள்ள சக்தி குறைகிறது.

ஆலோசனை: உங்களுக்கு செரிமான பிரச்சினைகள் இருந்தால், எந்தவொரு உடற்பயிற்சிக்கு முன்பும் சிறிதளவு ஸ்னாக்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும், ஏனென்றால் தீவிர உடற்பயிற்சி வயிற்ற்றில் காஸ்ட்ரிக் அமிலத்தை தூண்டும் , இது வயிற்றுக்கு தீங்கு விளைவிக்கும்.

1. சிட்ரஸ் சாறு குடிப்பது

சிட்ரஸ் பழங்களில் உள்ள அமில மற்றும் கடுமையான இழைகள் உங்களுக்கு வயிற்று எரிச்சல், இரைப்பை அழற்சி போன்றவையை ஏற்படுத்தும்.

அறிவுரை: தண்ணீர் கலந்து குடிப்பது நல்லதாகும்.
போனஸ்: வெருவயிற்றின் நன்மைகள்

ஓர் அறிவியல் ஆய்வின்படி வெறுவயிற்றில் உங்கள் முடிவெடுக்கும் திறனும் கவனத்தை அதிகரிக்கவும் முக்கிய பங்கு ஆற்றுகிறது என்று தெரிவிக்கிறது. இதனால் வெறும் வயிற்றில் இருக்கும் போது முக்கிய முடிவெடுக்கும் திறன் மற்றும் சிறிய முக்கிய வேலைகளை செய்யலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here