சில வகை பழங்களின் கொட்டையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இதை நாம் தெரிந்து கொள்வதில்லை. ஆம், சில பழங்களின் கொட்டைகள் சூப்பர் உணவுகள் என்று சொல்லக் கூடிய அளவுக்கு நன்மைகள் கொண்டவையாக இருக்கின்றன. நம்முடைய உடலில் எல்லா வகையான ஊட்டச்சத்துக்களையும் அதிகரிக்கிற சில வகை கொட்டைகளைப் பற்றி இங்கே நாங்கள் கொடுத்திருக்கிறோம்.

health benefits of these seeds of having empty stomach in every morning

வெயில் காலம் தொடங்கி வெளுத்து வாங்குகிறது. கோடையின் வெப்பத்தைக் குறைக்க பலர் பல விதமான வழிகளை பின்பற்றுகின்றனர். உடலில் கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்க பழங்கள் மிகவும் நல்லது. பொதுவாக பழங்களை நாம் சாப்பிட்டு விட்டு அதன் கொட்டைகளை குப்பையில் வீசி விடுகிறோம். இனியாவது இந்த விதைகளை தூக்கி வீசாமல் பத்திரப்படுத்தி வெயிலிலோ நிழலிலோ உலர்த்தி டப்பாவில் போட்டு வைத்திருங்கள். தினமும் காலையில் 4 விதைகள் வீதமாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள். நீங்கள் மருத்துவமனைக்குப் போக வேண்டிய வேலையே இருக்காது.

ஆளி விதைகள்

ஆளி விதைகள்

சூரியகாந்தி விதைகள்

சூரியகாந்தி விதைகள்

இந்த விதைகளில் ஒமேகா 6 கொழுப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் வைட்டமின் ஈ, பி காம்ப்ளெக்ஸ் போன்றவையும் அதிகமாக உள்ளன. இவற்றில் கால்சியம், இரும்பு, மங்கனீஸ், ஜின்க் போன்ற மினரல்களும், ட்ரிப்டோபான் என்ற அமினோ அமிலம் போன்ற அதிகமாக உள்ளன. சூரிய காந்தி விதையில் நிறைய எண்ணெய்த் தன்மை இருக்கும். அதனால் நிறைய பேருக்கு இதை சாப்பிடப் பிடிக்காது. அப்படி இதன் சுவை பிடிக்காதவர்கள் வெறும் வாணலியில் லேசாக இதை வறுத்து பொடி செய்து எடுத்து வைத்துக் கொண்டு காலையில் அந்த பொடியை வெறும் வயிற்றில் சாப்பிடுங்கள்.

தர்பூசணி விதைகள்

தர்பூசணி விதைகள்

தர்பூசணி பழத்தை சாப்பிட்டு விட்டு பெரும்பாலும் அதன் விதைகளை நாம் குப்பையில் தான் வீசுகிறோம். ஆனால் அந்த விதையில் பி காம்ப்ளெக்ஸ் வைட்டமின் மிகவும் அதிகமாக உள்ளன. மேலும் மினரல்கள் மெக்னீசியம், பாஸ்பரஸ், ஜின்க், இரும்பு, பொட்டசியம் மற்றும் காப்பர் அதிக அளவில் உள்ளன. ஆகவே இந்த விதைகளைத் தூக்கி எறியாமல், அதனை முளைக்கவைத்து, காய வைத்து, பயன்படுத்தலாம்.

பூசணி விதைகள்

பூசணி விதைகள்

இந்த விதைகளை 5-10 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைக்கவும். கொதித்த பின், தண்ணீரை வடிகட்டி, சிறிதளவு எண்ணெய் விட்டு அதனை வறுத்துக் கொள்ளவும். பிறகு உப்பு சேர்த்து காய வைக்கவும். இவற்றில் ஒமேகா 6 கொழுப்பும், ஒற்றை புரிதக் கொழுப்பு அமிலங்களும் உள்ளன. மேலும் இவற்றில் வைட்டமின் ஈ, வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் மற்றும் மங்கனீஸ், காப்பர், பொட்டசியம், கால்சியம், இரும்பு, மெக்னீசியம், ஜின்க், செலினியம் போன்ற எண்ணற்ற மினரல்கள் இந்த விதையில் அடங்கி உள்ளன. ஆண்மை விருத்தியை மேம்படுத்தவும் உடலுக்கு அதிக வலிமையைக் கொடுக்கவும் கூட இந்த விதைகள் பயன்படுகின்றன.

பப்பாளி விதைகள்

பப்பாளி விதைகள்

பப்பாளி விதையில் கால்சியம், மெக்னீசியம், மற்றும் பாஸ்பரஸ் போன்றவை அதிகமாக உள்ளன. இவை ஒரு திடமான கிருமிநாசினியாக உள்ளன. மேலும் செரிமான மண்டலத்தில் வீக்கத்தைக் குறைக்கும் தன்மையும் இவற்றிற்கு உண்டு. இந்த விதைகள் சிறிதளவு கசப்பு தன்மைக் கொண்டது. ஆகையால் பப்பாளி விதிகளை முழுவதுமாக அப்படியே உண்ணலாம் அல்லது சிறிதளவு தேன் சேர்த்தும் உண்ணலாம். பப்பாளியில் வைட்டமின் ஏவும் அதிக அளவில் இருக்கிறது. பப்பாளி பொதுவாக எல்லா சீசன்களிலும் கிடைக்கக்கூடிய பழம் தான். சிலர் பப்பாளி உடலுக்கு சூடு என்று சொல்வார்கள். ஆனால் அதன் விதை உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது.

சியா விதைகள்

சியா விதைகள்

சியா விதையில் ஒமேகா 3 கொழுப்பு அதிகமாக உள்ளது. மேலும் இரும்பு, கால்சியம் போன்ற மினரல்கள் அதிகமாக உள்ளன. இரவில் ஒரு கப் நீரில் ஒரு கைப்பிடி சியா விதிகளை ஊற வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் முதல் வேலையாக இந்த நீரை அருந்துங்கள். சியா விதை உடலுக்கு மிக மிக குளிர்ச்சியைத் தரக்கூடியது. அதனால் வெயில் காலங்களில் குடிக்கும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் சியா விதைகளை பாட்டிலில் போட்டு வைத்து குடித்து வாருங்கள். கொளுத்தும் வெயிலை குறைந்த செலவில் சமாளித்து விடலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here