தமி​ழ​கத்​தில் வரும் ஜூன் மாதம் முதல் கல்​வித் தொலைக்​காட்சி சேவை தொடங்​கப்​ப​ட​வுள்​ள​தால், அரசு உயர்​நிலை, மேல்​நி​லைப் பள்​ளி​க​ளில் புதிய தொலைக்​காட்சி வாங்​கப்​பட வேண்​டும் என பள்​ளிக் கல்​வித்​துறை உத்​த​ர​விட்​டுள்​ளது.
இது தொடர்​பாக அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வ​லர்​க​ளுக்கு பள்​ளிக்​கல்வி இயக்​கு​நர் வி.சி.​ரா​மேஸ்​வ​ர​மு​ரு​கன் அனுப்​பி​யுள்ள சுற்​ற​றிக்கை விவ​ரம்:

பள்​ளிக்​கல்​வித் துறைக்​கென தமிழ்​நாடு அரசு கேபிள் தொலைக்​காட்சி நிறு​வ​னம் “அலை​வ​ரிசை 200′ என்ற தடத்தை ஒதுக்​கீடு செய்து மாண​வர்​கள் பயன்​பெ​றும் வகை​யில் கல்வி நிகழ்ச்​சி​களை வரும் கல்​வி​யாண்​டில் ஜூன் மாதம் முதல் ஒளி​ப​ரப்​பத் திட்ட​மிட்​டுள்​ளது.

எனவே, அனைத்து அரசு மற்​றும் அரசு உத​வி​பெ​றும் உயர்​நிலை, மேல்​நி​லைப் பள்​ளி​க​ளில் வண்​ணத் தொலைக்​காட்​சிப் பெட்டி​க​ளை​பு​தி​ய​தாக வாங்​கி​ட​வும், ஏற்​கெ​னவே உள்ள தொலைக்​காட்​சிப் பெட்டி​களை சீர் செய்து பயன்​ப​டுத்​தப்​பட வேண்​டும் என​வும் அறி​வு​றுத்​தப்​ப​டு​கி​றது.
இதற்​கான செல​வி​னங்​க​ளுக்கு பெற்​றோர்- ஆசி​ரி​யர் கழக நிதி, பள்​ளி​கள் மூல​மாக திரட்​டப்​பட்டு குவிந்த நிதி மற்​றும் இதர நிதி​களை விதி​க​ளின் படி பயன்​ப​டுத்​திக் கொள்​ள​லாம். மேலும் உள்​ளூர் அரசு கேபிள் தொலைக்​காட்சி நிறு​வ​னம் செட் ஆஃப் பாக்​ஸý​டன் இணைப்பு வழங்க வரும்​போது தலை​மை​யா​சி​ரி​யர்​கள் உரிய ஒத்​து​ழைப்பு கொடுக்க வேண்​டும் என அதில் கூறி​யுள்​ளார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here