சென்னை: தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் விற்பனை செய்யக்கூடாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் விற்ககூடாது. புத்தகங்கள், காலணிகள் விற்கலாம் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோவை தனியார் பள்ளி ஒன்றின் மீது ஹேமலதா என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பள்ளி நிர்வாகம், நோட்டு புத்தகங்களுக்கு 5 ஆயிரம், பாடப்புத்தகங்களுக்கு 5 ஆயிரம், ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் என்று வாங்குமாறு நிர்ப்பந்திப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட் நீதிபதி, ” ஸ்கூல் பேக், லஞ்ச் பேக் வாங்குமாறு பெற்றோரை தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டாயப்படுத்த கூடாது. அதேநேரத்தில் பாடப்புத்தகங்கள், நோட்டுகள், காலணிகள் இவற்றை விற்கலாம்,” என்று கூறி வழக்கை ஜூன் 10 க்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here