வணக்கம்,
நீட், ஐ ஐ டி, ஜே இ இ, யுபிஎஸ்சி போன்ற தேர்வுகளுக்கு தயாராகும் முறை, பயிற்சி பெறும் முறைகளைப் பற்றி இப்பொழுது தெரிந்துகொள்வோம்.

குறிப்பு:

மதிப்பெண் பெறுவதை மட்டுமே முக்கிய நோக்கமாக கொண்ட
கோழிப்பண்ணை கலாச்சார டுடோரியல்
பள்ளி மாணவர்களுக்கு கீழே உள்ள தகவல் பொருந்தாது.

முதலாவதாக மனப்பான்மை:

நம்முடைய மாணவர்கள் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் பொழுது அந்த கல்வியாண்டில்
இருக்கக்கூடிய பாடங்களை மட்டும் படித்துவிட்டு ஆண்டு இறுதி தேர்வில் மதிப்பெண் பெறும் நோக்கத்தில் மட்டுமே படிக்கிறார்கள். ஆண்டு தேர்வில் வெற்றி பெற்றால் போதும் மதிப்பெண் பெற்றால் போதும் என்ற ஒரு மனப்பான்மை யில் மட்டும் செயல்படுகிறார்கள்
பின்னாட்களில் நடைபெறும்
தகுதித் தேர்விற்கோ போட்டித் தேர்விற்கோ என முன்கூட்டியே திட்டமிட்டு தங்களை தயார்செய்து கொள்ள அவர்களுக்கு தெரியவில்லை, அவர்களுக்கு சொல்லித்தர பயிற்சி பெற்றவர்களும் அதிகமாக இல்லை.
தொடர் முயற்சியும், தொடர் பயிற்சியும் மிகமிக முக்கியமான ஒன்று, ஒரு மாத காலம், ஓராண்டு கால பயிற்சி முழு வெற்றிக்கு போதுமானதாக இருக்காது.

மனப்பான்மை மாற்றம் / மடை மாற்றம்:

மனப்பான்மையை சிறிது மாற்றிக்கொண்டு வகுப்பில் படிக்க கூடிய பாடங்கள் அனைத்தையும் மூன்று வகையான முக்கியமான நோக்கங்களுக்காக பிரித்துக் கொண்டு தங்களை தயார் செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

முதல் வகை:

முதலாவதாக குறிப்பிட்ட கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டத்தை ஒட்டிய பகுதிகளைப் படித்து அதில் இருக்கக்கூடிய உட்கருத்துக்களை நல்லபடியாக புரிந்துகொண்டு குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டும்,
இதற்கு கருப்பொருளை புரிந்து கொள்ளுதல் (1.concept understanding) என்று பெயர்.
முக்கியமான கருத்துக்களை மனதில் வைத்துக் கொள்ளுதல் (2.Retaining the concept) அவ்வப்போது மனதில் அசைபோடுதல் (3. Recalling the concept) பிறகு அந்த கல்வியாண்டிலேயே தேர்வுகளை எழுதி வெற்றி பெறுதல் இது முதலாவது வகை.

இரண்டாவது வகை:

தகுதித் தேர்வுகள்:
(Qualifying exam – NEET, JEE,…)

பள்ளிப்படிப்பு கல்லூரிப் படிப்பு படித்துக் கொண்டு இருக்கும் போதே தகுதித் தேர்விற்காக தங்களை தயார் செய்து கொள்வதை பற்றிய விழிப்புணர்வும், தொடர் கற்றல் பயிற்சியும் தனக்கான பாணியில்
(Own style of preparation methods) முறைப்படி அமைத்துக் கொள்ளும் போது ஒவ்வொருவரின் விருப்பப்படி சிறந்த உயர்கல்வி அமையும். இதற்காக சிறந்த பாடப்புத்தகங்களும்,
வல்லுனர்களின் வழிகாட்டுதலும் மிக அவசியம்.

மூன்றாவது வகை:

(Competitive exams)
வேலை வாய்ப்பினை கொடுக்கக்கூடிய தேர்வு மாநில அரசுகளும்,மத்திய அரசும், SSC, ரயில்வே, வங்கி துறை, தன்னாட்சி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் இது போன்ற நிறுவனங்களில் அவர்களுக்கு தேவையான ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை அவர்களாகவே தேர்வுகளை நடத்தி தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பணி வழங்குகிறார்கள் அதுபோன்ற சூழ்நிலையில் தாங்கள் எப்படி அந்த தேர்வுகளுக்கு தயார் செய்ய வேண்டும் என்பதைப்பற்றி நாம் அறிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

இந்த தேர்வுகள் பற்றிய அறிவிக்கை அனைத்தும் தினசரி நாளிதழ்கள் மற்றும் வலைதளங்களில்
வெளியிடப்படும். பாடத்திட்டங் களுக்கு ஏற்ப தங்களை தயார் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு சிறந்த திட்டத்துடன் மீண்டும் உங்களை அடுத்த மின்னஞ்சலில் சந்திக்கிறேன்.

சாமானிய மக்களுக்கான கல்விப்பணியில் உங்களுடன்

பாலமோகன் ராமசாமி
இயக்குனர்
ஆக்டிவிட்டி எஜூகேட்டர்
தேசிய கல்வி வள நிறுவனம்
பெங்களூரு
மொபைல் 7892898919

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here