சிலரது உடலில் இருந்து எப்போதும்
துர்நாற்றம் வந்து கொண்டேயிருக்கும்.
இதற்கு காரணம் நமது உடலில் இருக்கும்
பாக்டீரியாக்களும், நாம் சாப்பிடுகின்ற
சில உணவுகளும் காரணமாகும். இப்படி
துர்நாற்றத்தை ஏற்படுத்தும் சில
உணவுகளை தெரிந்து கொள்வோம்.

பூண்டு:
பூண்டு சல்பியூரிக் அமிலத்தின்
மூலப்பொருளான அல்லிசின் என்னும்
வேதிப்பொருளை வெளியிடுகிறது.
இவை பாக்டீரியாக்களுடன் வினைபுரிந்து
வியர்க்கும் போது மோசமான துர்நாற்றத்தை
வெளியிடும். இது பேசும் போதும்
மோசமான வாசனையை உண்டாக்கும்.

குறைந்த கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள்:
கார்போஹைட்ரேட்டானது நம் உடலுக்கு
தேவையான ஆற்றலை தரக்கூடியதாகும்.
இவை நம் உடலில் குறையும் போது, நமது
உடல் கீட்டோன் என்னும் நச்சு பொருளை
வெளியிடுகிறது. இந்த நச்சு பொருளானது
வெளியாவதால் நாம் பேசும்போது துர்நாற்றம்
வெளிப்படுகிறது. ஆகவே கார்போஹைட்ரேட்
உள்ள உணவுகளை தவிர்க்காமல் சாப்பிடுங்கள்.

காபி உட்கொள்வதால்:
காபி குடித்தவுடன் உங்கள் வாய் மிகவும் உலர்ந்து
விடுகிறது. இதனால் வாயில் பாக்டீரியாக்கள்
வளர வாய்ப்புகள் அதிகரிக்கிறது. இதன் காரணமாக
பேசும்போதும் வியர்வை வரும்போதும் துர்நாற்றம்
ஏற்படுகிறது.

இறைச்சி உண்பதால்:
‘இறைச்சி’ உண்பதற்கு அதிக சுவையாக இருக்கும்.
ஆனால் இறைச்சி செரிக்க அதிக நேரம்
தேவைப்படுகிறது. இது குடலில் நச்சுக்களை
விடுவிக்கிறது. இது வெளியிடும் பாக்டீரியா அதிக
வியர்வையை ஏற்படுத்துகிறது. இப்படி வியர்க்கும்
போது துர்நாற்றம் ஏற்படுகிறது.

சில காய்கறிகள்:
காலிபிளவர், முட்டைகோஸ், ப்ரோக்கோலி
போன்ற காய்கறிகளில் சல்பர் அதிகளவு
காணப்படுகிறது. இது மோசமான வாசனையை
உருவாக்கக்கூடிய ஒரு மூலப்பொருளாகும்.
ஆகவே இந்த காய்கறிகளை சமைக்கும் பொழுது
அதில் ஏலக்காய், இலவங்கப்பட்டை, சீரகம்
போன்ற பொருட்களை சேர்த்து சமைக்கவும்.

ஆல்கஹால் உட்கொண்டால்:
ஆல்கஹால் அருந்தும்போது அசிட்டிக் அமிலம்
உருவாகிறது. இது பேசும்போதும் மற்றும்
வியர்க்கும் போதும் துர்நாற்றத்தை உருவாக்குகிறது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here