சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் புத்தக வாசிப்பை வலியுறுத்தி, அரசு பள்ளி மாணவ – மாணவியர், தரமணியில், மனித சங்கிலி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தரமணியில் உள்ள, ‘பாலர் பூங்கா’ என்ற அமைப்பு, புத்தக வாசிப்பு, சுற்றுச்சூழல் சம்பந்தமான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.அந்த அமைப்பு சார்பில், அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது, புத்தக வாசிப்பை ஊக்குவிப்பது, மரம் வளர்ப்பு, நீர்நிலை பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, தரமணியில் நேற்று, மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியது.அரசு பள்ளியில் படிக்கும், மாணவ – மாணவியர் பங்கேற்று, ‘பூமியை நேசிப்போம், உலகை வாசிப்போம், மரம் வளர்ப்போம், மழைநீர் சேமிப்போம், ஏரி குளங்களை பாதுகாப்போம்’ உள்ளிட்ட வாசகங்கள் எழுதிய பதாகைகள் பிடித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்நிகழ்ச்சியில், மாணவர்களுடன், பெற்றோர், நீர்நிலை ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here