வாட்ஸ்அப் நிறுவனம், தனது மென்பொருளை அப்டேட் செய்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது. இதனால், 2019, டிசம்பர் 31 ஆம் தேதி முதல் விண்டோஸ் போன்களில் வாட்ஸ்அப் செயலி வேலை செய்யாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்டோஸ் சார்பில் வெளிவந்துள்ள அனைத்து போன்களுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் விண்டோஸ் போன்களுக்கென்று பிரத்யேகமான UWP என்ற செயலி அறிமுகப்படுத்தப்படும் எனப்படுகிறது. இந்த புதிய செயலி விண்டோஸ் டெஸ்க்டாப் மற்றும் விண்டோஸ் போன்களில் வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image result for windows phone

இது குறித்து ஃபேஸ்புக்கின் துணை நிறுவனமான வாட்ஸ்அப், ‘விண்டோஸ் மொபைல் போன்களுக்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சப்போர்ட் கொடுத்து வருவதை நிறுத்த உள்ளது. இதையொட்டி, விண்டோஸ் போன்களுக்கான கடைசி வாட்ஸ்அப் அப்டேட் வரும் ஜூன் மாதம் விடப்படும். இந்த ஆண்டு இறுதிவரை, விண்டோஸ் போன்களில் வாட்ஸ்அப் செயலி வேலை செய்யும்’ என்று குறிப்பிட்டுள்ளது.

Related image

விண்டோஸ் போன் 7-ல், வாட்ஸ்அப் 2016 முதலே வேலை செய்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ஆண்ட்ராய்டு (v2.3.7 மற்றும் பழைய வகைகள்) மற்றும் iOS (iOS 7 மற்றும் பழைய வகைகள்) போன்களில் 2020, பிப்ரவரி 1 ஆம் தேதியுடன் வாட்ஸ்அப் செயலி இயங்குவது நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image result for windows phone

வாட்ஸ்அப் செயலிக்கு மாற்றாக UWP செயலி அறிமுகப்படுத்தப்படும் என்றும், லேட்டஸ்ட் விண்டோஸ் போன்களில் இந்த செயலி வேலை செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வராததால், பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here