நீட் தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்ணை 6 விழுக்காடு வரை குறைப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது

2019-20ம் ஆண்டு மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் கட் ஆப் மதிப்பெண்களை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக வாரிய ஆளுநர்கள், இந்திய மருத்துவக் கவுன்சில் ஆகியவற்றுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கட் ஆப் மதிப்பெண்ணை 6 விழுக்காடு வரை குறைக்க மத்திய சுகாதார அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.

தற்போது இந்தத் தேர்வில் பொதுப்பிரிவினர் 44 விழுக்காடும், மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 39 விழுக்காடும், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 34 விழுக்காடும் கட் ஆப் மதிப்பெண்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு நடக்கும் மருத்துவப் படிப்பு கவுன்சிலிங்கில் திருத்தி அமைக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களின்படி மாணவர்களை சேர்க்கத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் மத்திய சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here