சென்னை : ‘முதுகலை மருத்துவப் படிப்பில் சேர அரசு ஊழியர்களிடம் உத்தரவாதம் பெற வேண்டும்’ என்ற நிபந்தனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்கு பதில் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ௧௫ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் டி.கே.சரவணன் என்பவர் தாக்கல் செய்த மனு:முதுகலை மருத்துவ படிப்புக்கான விளக்க குறிப்பேட்டை மருத்துவ கல்வி இயக்குனர் வெளியிட்டுள்ளார். பயிற்சி முடித்த டாக்டர்கள் அரசு பணியில் ஐந்து ஆண்டுகள் இருக்க வேண்டும்; அதற்காக மருத்துவப் படிப்பில் சேரும் போது உத்தரவாதம் அளிக்க வேண்டும். 
முதுகலை பட்டப் படிப்பில் சேர ௪௦ லட்சம் ரூபாய்க்கான உத்தரவாத ஆவணம் முதுகலை டிப்ளமா படிப்பில் சேர ௨௦ லட்சம் ரூபாய்க்கான உத்தரவாத ஆவணம் செலுத்த வேண்டும். மேலும் நிரந்தர அரசு ஊழியர்களிடம் இருந்தும் உத்தரவாதம் பெற்று தாக்கல் செய்ய வேண்டும்.ரூபாய்க்கான உத்தரவாத ஆவணம் தாக்கல் செய்வதில் ஆட்சேபனையில்லை; ஆனால் அரசு ஊழியர்கள் இருவரிடம் இருந்து உத்தரவாதம் பெற வேண்டும் என்பது நியாயமற்றது.பொருளாதார ரீதியில் பின்தங்கிய மாணவர்களால் அரசு அதிகாரிகளை அணுகி உத்தரவாதம் பெறுவது கடினம். 
அதனால் மாணவர்கள் சேர்க்கை ரத்தாகும் வாய்ப்பு உள்ளது.அரசு அதிகாரிகளும் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி உத்தரவாதம் அளிக்க பெரும் தொகையை கேட்கலாம். பலர் உத்தரவாதம் அளிக்க மறுக்கின்றனர்.எனவே நிரந்தர அரசு ஊழியர்களிடம் உத்தரவாதம் பெற வேண்டும் என்ற நிபந்தனைக்கு தடை விதிக்க வேண்டும். அதை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய ‘டிவிஷன் பெஞ்ச்’ முன் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. 
ஒவ்வொரு மாணவரும் அரசு ஊழியரிடம் உத்தரவாதம் கேட்கும்படி அரசு எப்படி எதிர்பார்க்கிறது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.அரசு தரப்பில் பதில் அளிக்க அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்துஸ்ரீ மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவிட்டு விசாரணையை ௧௫ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here