அறிக்கை
07.05.2019
~~~~~~~~~~
திமுக ஆட்சியில் சிறப்பு தனி தேர்வு நடத்தி பணி தொடர செய்தது போன்று
——————————
2010 ஆகஸ்ட் 23ம் தேதிக்குப்பின் பதிவுமூப்பு அடிப்படையில் பணியில் சேர்ந்த ஆசிரியர்களை சிறப்பு தனி ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தி பணித் தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க
================
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு வேண்டிக் கேட்டுக் கொள்கிறது
==================


மத்திய அரசு கட்டாயக் கல்வி சட்டத்தை 2009 ஆம் ஆண்டு அறிமுக படுத்தி 23. 08.2010 ம் ஆண்டு நடைமுறை படுத்தி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசியர்கள் பட்டம் பெற்றிருந்தாலும் கட்டாயம் ஆசிரியர்கள் தகுதி எழுதி வெற்றி பெற்றால் தான் அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றும் முடியும் என்ற சட்டத்தை கொண்டுவந்தது

தமிழகத்தில் 15 நவம்பர் 2011 ம் ஆண்டில் தான் நடைமுறைக்கு வந்தது. 23.08.2010 பின் பதிவு மூப்பு அடிப்படையில் பணியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார் 6 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்கள் உட்பட 30 ஆயிரம் ஆசிரியரகள் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றிபெற்றால் தான் பணித் தொடரமுடியும் என்ற கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டனர்

பணியில் சேர்ந்த நாளில் இருந்து 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கி அதற்குள் தகுதி தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

பலர் தேர்வில் வெற்றிபெற வில்லை ஏன் என்றால் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வருடத்திற்கு இரண்டு முறை ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தியாக வேண்டும், ஆனால் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு நடத்தவில்லை

அதனால் தான் அவர்களால் தொடர்ந்து தேர்வு எழுத முடியவில்லை என்பதை அறிந்த நீதிமன்றம் கடைசி அவகசமாக மீண்டும் 4 ஆண்டுகள் கால நீட்டிப்பு வழங்கியது. அது மார்ச் மாதம் 31தேதி 2019 முடிந்து விட்டது

8 ஆண்டுகளில் 16 முறை கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் நடைபெற்றிருக்க வேண்டிய தகுதித் தேர்வு 4 முறை மட்டுமே நடந்து இருக்கின்றது என்பதை தமிழக அரசு கருத்தில் கொள்ள வேண்டும்

2003 மத்திய அரசு பழைய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து புதிய பங்களிப்பு ஓய்வுதியத் திட்டத்தை கொண்டுவந்தது

அதனை தமிழக அரசும் வரவேற்று 2004ம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்த தமிழக அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் அனைவரையும் புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணி நியமனம் செய்தது

இதனை எதிர்த்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பொழுது அரசு நிறுவனங்கள் அலுவலகங்கள் பள்ளிகள் முழுமையாக இயங்க வில்லை அரசு வேலை நிறுத்தத்தை ஒடுக்குகின்ற வகையில் சுமார் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களை பணி நீக்கம் செய்தது

அப்போது 15000 இளநிலை உதவியாளர்களை தமிழ்நாடு அரசு தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யாமல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று பதிவு செய்து இருந்தவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் தற்காலிக பணியாளர்களாக மாதம் ரூபாய் ரூ.4000/- ஊதியத்தில் பணி நியமனம் செய்தார்கள்

பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்ததை எதிர்த்து அதில் வழக்கு தொடர்ந்தார்கள் நீதிமன்றம் பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்தது செல்லாது தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்து நியமனம் செய்யவேண்டும் என்று தீர்ப்பளித்தது

அதன் பிறகு வந்த திமுக அரசு அவர்களை பணி நீக்கம் செய்யாமல் தமிழ்நாடு தேர்வு வாரியத்தின் மூலமாக அவர்களுக்கென்று சிறப்பு தேர்வை நடத்தி ரூபாய் தற்காலிக பணியாளராக இருந்தவர்களை காலமுறை ஊதியத்தில் கொண்டுவந்து பணி நிரந்தரம் செய்தார்கள்

அதே நிலையில்தான் 1500 ஆசிரியர்களும் இருக்கின்றார்கள், அவர்கள் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்க இயலாத பட்சத்தில் பணி தொடர நீதிமன்றத்தில் அனுமதி பெற்று கால நீட்டிப்பு செய்து அவர்களுக்கு என்று தனி சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்காமல் பணி தொடர ஆவன செய்ய வேண்டுமாய் வேண்டிக் கேட்டுக் கொள்கிறது

சா.அருணன்
நிறுவனத் தலைவர்
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here