CBSE Board Results 2019: சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு முடிவு இன்று வெளியாகாது 
சிபிஎஸ்இ10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எந்த தோ்வு முடிவுகளையும் இன்று வெளியிடப்போவதில்லை என சிபிஎஸ்இ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி முதல் மார்ச் 29ஆம் தேதி வரை 10ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தோ்வுகள் நடைபெற்றன. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு மற்றும்10ம் வகுப்பு  தோ்வு முடிவுகள் மே மாதம் 3வது வாரத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், கடந்த 2ஆம் தேதி திடீரென 12ஆம் வகுப்பு தோ்வு முடிவுகள் வெளியாகின. இந்நிலையில், 10ம் வகுப்புகளுக்கான தோ்வு முடிவுகள் இன்று (மே 5) வெளியாகலாம் என்று தகவல் வெளியானது.

இந்தத் தகவல் வேகமாக பரவியதைத் தொடர்ந்து, சிபிஎஸ்இ நிர்வாகம் இதைப் பற்றி தெளிவுபடுத்தியுள்ளது. “எந்த தேர்வு முடிவுகளையும் சிபிஎஸ்இ இன்று வெளியிடப்போவதில்லை” எனக் கூறியுள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் என்று? எந்த நேரத்தில் வெளியாகும்? எப்படி முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்? என விரிவான தகவல்களை உரிய நேரத்தில் அறிவித்த பின்பே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here