இலவச, கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களை சேர்ப்பதற்கு தமிழகம் முழுவதும் இதுவரை 51ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் வரும் 18-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் இலவசமாக சேர்க்கப்படுவார்கள். இத்திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன்படி, மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தனியார் பள்ளிகளில் 1.43 லட்சம் இடங்கள் உள்ளன.இந்நிலையில், வரும் கல்வியாண்டில் இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 22-ம் தேதி தொடங்கியது. இதுவரை 51 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான அவகாசம் மே 18-ம் தேதியுடன் முடிகிறது.

எனவே, விருப்பம் உள்ள பெற்றோர்கள் தேர்வுத் துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in) விண்ணப்பங்களை பதிவுசெய்ய வேண்டும்.இதற்கான விண்ணப்பங்கள், தனியார் பள்ளி பட்டியல் மற்றும் அதில் உள்ள இடங்கள் எண்ணிக்கை விவரம் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இணைய வசதி இல்லாதவர்கள் வட்டார வள மையம், மாவட்ட கல்விஅலுவலகம், முதன்மை கல்வி அலுவலகங்களில் இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். அரசு இ-சேவை மையங்களிலும் இதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால் வெளிப்படையான முறையில் குலுக்கல் நடத்தி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கல்வித் துறை அதிகாரிகள் முன்னிலையில் இந்தகுலுக்கல் நடைபெறும். ஒரு பெற்றோர் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். இந்த வாய்ப்பை பெற்றோர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here