2019 ஜேஇஇ அட்வான்ஸ்  தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று ஆன்லைன் மூலம் தொடங்குகிறது.

ஐஐடி, என்.ஐ.டி போன்ற பிரபலமான உயர்கல்வி நிறுவனங்களில் பொறியியல், கட்டிடக்கலை போன்ற துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள நடத்தப்படும் பொத நுழைவுத் தேர்வு ஜே.இ.இ. (JEE) எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination). இதனை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வுகள் ஏஜென்சி நடத்துகிறது.

இரண்டு தாள்களாக நடத்தப்படும் ஜே.இ.இ மெயின் தேர்ச்சி பெற்றவர்கள்  ஜே.இ.இ அட்வான்ஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு ஜனவரி மற்றும் ஏப்ரலில் நடைபெற்ற ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 31ல் வெளியாகின.

இந்நிலையில், ஜேஇஇ மெயின் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது. jeeadv.ac.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். மே 9ஆம் தேதியுடன் விண்ணப்பப் பதிவு முடிவடையும்.

வரும் மே 27, 2019 அன்று ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள்

1. 2019 ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற முதல் 2,45,000 பேரில் (அனைத்து பிரிவுகளும் சேர்த்து) ஒருவராக இருக்க வேண்டும்.

2. அக்டோபர் 1, 1994 அல்லது அதற்குப் பின் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு உண்டு.

3. அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகளில் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே ஜேஇஇ தேர்வை எழுத முடியும்.

4. விண்ணப்பிப்பவர் 2018 அல்லது 2019ல் 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

முக்கிய தேதிகள்

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு ஆரம்பிக்கும் நாள் – மே 3, 2019 (இன்று)
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் – மே 9, 2019
கட்டணம் செலுத்த கடைசி நாள் – மே 10, 2019 (மாலை 5 மணிக்குள்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here