தமிழ்நாடு அரசு சார்பாக ‘கல்வித் தொலைக்காட்சி’ தொடங்கப்படும் என்று இந்த ஆண்டின் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, அதுகுறித்து வேறெந்தத் தகவல்களும் அதிகம் தென்படவில்லை. தகவல் அறிய, கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிப் பொறுப்பாளர்களிடம் பேசினோம். “குழந்தைகளுக்கான பயனுள்ள தொலைக்காட்சியை அளிக்க வேண்டும் என்பதுதான் அரசின் நோக்கம். அதையும் பாடத் திட்டத்தோடு இணைந்த நிகழ்ச்சிகளாக அமைக்க முடிவெடுத்துள்ளோம். உதாரணமாக, 10 -ம் வகுப்புக்கான கணக்குப் பாடத்திற்கான நிகழ்ச்சி காலை 10 மணிக்கு ஆரம்பித்து 10.30 மணிக்கு முடியும். அந்த நேரத்தில், பள்ளிகளில் இதை ஒளிபரப்பலாம் .ஒரு வகுப்பின் நேரம் 40 நிமிடங்கள் என்பதால், மீதம் இருக்கும் 10 நிமிடங்களில் ஆசிரியர் கூடுதல் விளக்கம் தரலாம். சிறப்பாகக் கல்வி அளித்துவரும் எல்லோரையும் இதில் இணைக்கவிருக்கிறோம். சில ஆசிரியர்கள், பாடங்களைப் புதிய உத்தியோடு கற்றுத்தரலாம், அதை இந்த நிகழ்ச்சிமூலம் மாநிலம் முழுக்கத் தெரியப்படுத்துவோம். இதற்காக, கூகுள் ஷீட் மூலம் பல்வேறு ஆசிரியர்களை இணைத்துவருகிறோம். பள்ளி நாள்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளும் இருக்கும். சனி, ஞாயிறு விடுமுறை தினங்களில், மாணவர்களின் தனித்திறனை வளர்க்கும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும். நன்றாகப் பாடும் திறமைகொண்டவர்களுக்காகவே ‘கிரீடம்’ என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகயிருக்கிறது.
இதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும். அதற்கான இசைக்குழு, பெரும் பரிசு என அனைத்தும் உண்டு. கல்வித் தொலைக்காட்சிப் பணிகளுக்காக, 32 மாவட்டங்களிலும் ஆசிரியர் குழு அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழுவில் ஐந்து முதல் 10 ஆசிரியர்கள் அம்மாவட்டத் தேவைக்கு ஏற்ப இடம்பெற்றுள்ளனர். அவர்கள், முழுக்க தன்னார்வத்தோடு கோடை விடுமுறையிலும் அர்ப்பணிப்போடு வேலைபார்த்துவருகின்றனர். அதனால்தான், இதற்கான வேலைகள் விரைந்து முடிக்கப்பட்டுவருகின்றன” என்றார்

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here