சி.பி.எஸ்.இ பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் இதனை http://cbseresults.nic.in/cbseresults_cms/Public/Home.aspx என்ற இணையதள பக்கத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதேபோல் 10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுபிப்ரவரி 21 முதல் மார்ச் 29 வரை பெற்றது. மொத்தம் 12.5 லட்சம் மாணவர்கள் 12 ஆம் வகுப்புப் பொத்தேர்வையும் , 18.5 லட்சம் மாணவர்கள் 10 வகுப்புப் பொதுத் தேர்வையும் எழுத உள்ளனர்.

கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகும் என்று சிபிஎஸ்இ ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, இன்று மதியம் சி.பி.எஸ்.இ பன்னிரெண்டாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களுக்கும் ஒரே நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் கீழ்கண்ட இணையதள பக்கங்கள் மூலம் தங்களது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

1. http://cbseresults.nic.in/cbseresults_cms/Public/Home.aspx
2. http://cbse.examresults.net/
3. https://results.gov.in/nicresults/index.aspx

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here