#கோடையில் ஏற்படும் நீர் சுளுக்கு/
#நீர்கடுப்பு_நீங்க_எளியவழி

கோடை ஆரம்பித்துவிட்டாலே அனைவருக்கும் ஏற்படுகின்ற ஒரு அசாதாரண நிலை இந்த நீர் கடுப்பு அல்லது நீர் சுளுக்கு என்றழைக்கப்படும் அதி உஷ்ண நிலை.

நீர் கடுப்பு ஏற்பட்டுவிட்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும் சிறுநீர் கழிக்கும்பொழுது வலி ஏற்படும். குறைந்தது 30 முதல் 60 நிமிடங்கள் நீடிக்கும் இந்த நிலை கிட்டத்தட்ட சொல்ல முடியாத அளவுக்கு ஒரு அசாதாரண நிலையை ஏற்படுத்திவிடும்.

அதிகப்படியான உஷ்ணத்தால் இந்த நிலை ஏற்படுகிறது இதனை நீக்க பல்வேறு வழிகள் உள்ளன அவற்றில் சிறந்த வழி இளநீர் குடிப்பது, ஆனால் கோடை காலத்தில் ஒரு இளநீரின் விலை 50 முதல் ஆரம்பிக்கின்றது…

ஆனால் வெறும் ஒரு ரூபாய் செலவில் இந்த நீர் சுளுக்கு/ நீர் கடுப்பு நீக்கமுடியும்.

மண் பாக்கு/கொட்டை பாக்கு:-

கோடையில் வெளியில் சென்று வீடு திரும்பியவுடன் இரண்டு அல்லது மூன்று மண் பாக்கு /கொட்டைப்பாக்கு வாயில் போட்டு மென்று விழுங்கி விட்டு 3 டம்ளர் தண்ணீர் குடிக்கவும்.இப்படி குடித்தால் இரண்டு முதல் மூன்று நிமிடங்களில் நீர் சுளுக்கு/ நீர் கடுப்பு முற்றிலுமாக சரியாகிவிடும்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here