தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவர்களின் அறிவியல் திறனை வளர்க்க ‘சயின்ஸ் கார்னர்’ என்ற கையேட்டை புதுச்சேரி கல்வித்துறை தயாரித்துள்ளது. அதிலுள்ள சிறு அறிவியல் பரிசோதனைகளை தெரிந்து கொள்வதற்கு யூடியூப் சானலையும் தொடங்கியுள்ளது. புதுச்சேரி கல்வித் துறையில், குழந்தைகளின் அறிவியல் திறனை மேம்படுத்த புது முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 1 முதல் 5-ம்வகுப்பு வரை தொடக்கப் பள்ளிகளிலேயே அறிவியல் ஆர்வமுள்ள குழந்தைகளின் திறனைவளர்ப்பது அவசியம். இவ்வகுப்புகளில் அறிவியல் ஆய்வகங்கள் வசதி இல்லை. அதற்கு மாற்றுமுயற்சியை தற்போது தொடங்கி உள்ளனர்.
புதிய கையேடு சிறுசிறு அறிவியல் விஷயங்களை பரிசோதனை செய்யும் விதத்தில் ‘சமகர சிக்சா’ என்ற மத்திய அரசு திட்டத்தின்கீழ் அறிவியல் திறனை தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு கற்று தர ‘சயின்ஸ் கார்னர்’ என்ற புதிய கையேட்டை கல்வித்துறை உருவாக்கியுள்ளது. இதுதொடர்பாக ‘சமகர சிக்சா’ ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர் னாண்டஸ் கூறியதாவது: சமகர சிக்சா திட்டத்தின்கீழ் தொடக்கப் பள்ளியில் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த திட்டம் தயாரித்து விண்ணப்பித்தோம்.
தலா ரூ.5 ஆயிரம் ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ரூ. 5 ஆயிரம் ஒதுக்கீடு செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அனுமதி தந்துள்ளது. இதையடுத்து அறிவியல் ஆசிரியர்களை கொண்ட குழு அமைத்து ‘சயின்ஸ் கார்னர்’ என்ற தலைப்பில் கையேடு உருவாக்கியுள்ளோம். இந்த கையேடு மூலம் அறிவியல் கோட்பாடுகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்த விவரங்களை சிறு, சிறு பரிசோதனைகள் மூலம் குழந்தைகளே அறிய முடியும். அறிவியல் பரிசோதனைகளுக்கு தேவையான பொருட்கள், அதன் பயன் என அனைத்து விவரங்களும் கையேட்டில் இருக்கும். கையேட்டினை பயன்படுத்தி செயல்முறை விளக்கங்களை செய்வதற்காக தொடக்கப் பள்ளி மாணவர்களுக்காக யூடியூப் சேனலை உருவாக்கியுள்ளோம். தற்போது மாதிரி வீடியோக்களை பதிவிட தொடங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
வீடியோக்கள் வெளியீடு புதுச்சேரி பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ருத்ர கவுடு கூறும்போது, ”நடப்பாண்டு புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் ‘சயின்ஸ் கார்னர்’ திட்டப்படி 5-ம் வகுப்புமாணவர்களுக்கான அறிவியல்திட்டங்களை உருவாக்கியுள்ளோம். கையேடும் தயாரித்துள்ளோம்.
சிறு சிறு பரிசோதனைகள் சிறு, சிறு அறிவியல் பரிசோதனைகளை அவர்களே செய்து முழுமையாக கற்கலாம். இதற்கான யூடியூப் சேனலுக்கு தேவையான வீடியோக்கள் தயாரித்து வருகிறோம். முதற்கட்டமாக ஆசிரியர்களை கொண்டு பத்து வீடியோக்கள் தயாராகியுள்ளன. விரைவில் அனைத்தையும் பார்க்கலாம். குழந்தைகள் அறிந்துகொள்ளும் அறிவியல் சார்ந்த விஷயங்களின் வீடியோக்களும் இதில் இடம்பெறும்” என்று குறிப்பிட்டார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here