சென்னை: ஏற்கனவே தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை வைத்து காலிப் பணியிடங்களில் நிரப்பிவிட்டே புதிய அறிவிப்பை வெளியிட வேண்டும் டிஎன்பிஎஸ்சிக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த பரமானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், 2014ம் ஆண்டு தேர்வு எழுதி வேலைக்கு தேர்வான தனக்கு இன்னும் பணிவழங்கப்படவில்லை என்றும், தனக்கு பணிவழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏற்கனவே தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை காலிப்பணியிடங்களில் நிரப்பிவிட்டு அதன் பிறகே வேலைக்கான அடுத்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட உத்தரவிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
மேலும் காலிப்பணியிடம் இருந்தால் மனுதாரரின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் ஏற்கனவே தேர்வாகி காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களை காலிப்பணியிடங்களில் நிரப்பாமல் புதிய அறிவிப்பு வெளியிட்டால் கடுமையான உத்தரவை பிறப்பிக்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
source: oneindia.com

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here