இன்றுள்ள பல்வேறு காலநிலை மற்றும் பிற காரணிகளில் பணியாற்றி வரும் நாம் நமது உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது அவசியம். உடலுக்கு பல நன்மைகளை வாரி வழங்கும் வேர்க்கடலையை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து இனி காண்போம்.

வேர்க்கடலையை பொறுத்த வரையில் அதில் இருக்கும் அதிகளவு கொழுப்பின் காரணமாக உடலுக்கு சில தீங்குகள் ஏற்படலாம் என்றும் பெரும்பாலானோர் எண்ணி வருகின்றனர்., இந்த கூற்றானது முற்றிலும் தவறானது.

வேர்க்கடலையில் இருக்கும் நல்ல கொழுப்புக்களின் காரணமாக நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. உண்மையில் பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா பருப்பை விட வேர்க்கடலையில் அதிகளவு நன்மைகள் உள்ளது.

வேர்க்கடலையில் இருக்கும் நார்சத்து., புரத சத்து., கார்போஹைடிரேட்., பொட்டாசியம் மற்றும் வைட்டமின்கள் அதிகளவில் உள்ளது. இதன் மூலமாக நமது மூளையின் வளர்ச்சிக்கு தேவையான டானிக் வகைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.

நாளொன்றுக்கு சுமார் 30 கிராம் அளவிற்கு வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் பித்தக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த பிரச்சனையில் இருந்து விடுபட முடியும். இதுமட்டுமல்லாது இரத்தத்தின் ஓட்டமானது சீர்படுத்தப்பட்டு., இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் பாதுகாக்கப்டுகிறது.

வேர்க்கடலையில் இருக்கும் புரதச்சத்தின் காரணமாக கர்ப்பப்பை பிரச்சனை நீங்கி., பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல வழிவகை செய்து வழங்குகிறது. தினமும் உண்ணும் உணவில் கூட சிறிதளவு வேர்க்கடலையை உபயோகம் செய்யலாம்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here