சென்னை : இன்ஜினியரிங் ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை கணக்கிடும் முறையில் குழப்பம் வேண்டாம் என பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான கவுன்சிலிங்கை தமிழக உயர் கல்வித்துறை நேரடியாக நடத்த உள்ளது. தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் மற்றும் அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளின் பேராசிரியர்கள் அடங்கிய கமிட்டி மாணவர் சேர்க்கையை நடத்துகிறது.கடந்த ஆண்டில் நடந்த மாணவர் சேர்க்கையின் போது பிளஸ் 2 தேர்வில் ஒவ்வொரு பாடத்துக்கும் தலா 200 மதிப்பெண் வீதம் வழங்கப்பட்டது.

இதன்படி கட் -ஆப் மதிப்பெண் கணக்கிடப்பட்டது. அதாவது கணிதத்தில் 200க்கு பெறும் மதிப்பெண் 100 மதிப்பெண்ணாக மாற்றி கணக்கிடப்படும். இயற்பியல் வேதியியல் பாடங்களின் 200 மதிப்பெண்கள் 50 மதிப்பெண்களுக்கு கணக்கிடப்படும். இறுதியில் மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு கட் – ஆப் கணக்கிடப்படும்.அதாவது கட் ஆப் 200 மதிப்பெண்ணில் 50 சதவீதம் கணித மதிப்பெண்ணாகவும் தலா 25 சதவீதம் இயற்பியல், வேதியியலாகவும் கணக்கிடப்படும். இந்த சதவீதத்தில் இந்த ஆண்டும் எந்த மாற்றமும் இருக்காது என இன்ஜினியரிங் கமிட்டி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 
தற்போது கணித மதிப்பெண் 100க்கு வழங்கப்பட்டுள்ளது அப்படியே எடுக்கப்படும். இயற்பியல் மற்றும் வேதியியலில் வழங்கப்பட்டுள்ள 100 மதிப்பெண் பாதியாக மாற்றப்படும். இறுதியில் 200 மதிப்பெண்களுக்கு கட் – ஆப் கணக்கிட்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here