இங்குள்ள எல்லோரும் ஏதோ ஒரு வித நோயினால் நிச்சயம் பாதிக்கப்பட்டிருக்க கூடும். மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால், நோய்களின் தாக்கம் உடலில் அதிகம் ஆகிவிடும். அந்த வகையில், மக்கள் தொகையில் பாதிக்கு பாதி பேர், சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது முற்றிலும் கொடுமையான விஷயமாகவே கருதப்படுகிறது. இதனை தடுக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்தாலும், ஒரு சில முதன்மையான ஆற்றல் மிக்க வழிகளே கடைசியில் வெற்றி பெறும்

குறிப்பாக நீரிழிவு நோயை குணப்படுத்த கூடிய ஆயுர்வேத முறை முற்றிலும் சிறப்பு மிக்கதாகும். நம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே ஆயுர்வேத முறையில் நாம் நலம் பெறலாம்.

இந்த பதிவில் சர்க்கரை நோயை குணப்படுத்தும் சில முக்கிய ஆயுர்வேத வீட்டு முறைகளை பற்றி நாம் தெரிந்து கொண்டு, ஆரோக்கியமாக வாழ்வோம்.

எவ்வாறு கொடியதாகிறது..?

சர்க்கரையின் அளவு உடலில் அதிகரித்தால், இந்த நீரிழிவு நோய் கொடியதாக கருதப்படும். குறிப்பாக இதனை கிளைசெமிக் இன்டெக்ஸ்(glycaemic index) என்ற அளவின் மூலம் கணக்கிடுவர். உடலில் இன்சுலின் அளவு குறைத்திருந்தால் அது சர்க்கரை நோயாக மாறி விடுகிறது.

ஆயுர்வேதமும் நீரிழிவும்…

ஆயுர்வேத முறை முழுக்க முழுக்க இயற்கை ரீதியான பொருட்களை கொண்டு மருத்துவம் செய்யப்படுகிறது. இது மிகவும் பிரசித்தி பெற்ற மருத்துவ முறையாக, பல்லாயிரம் ஆண்டுகளாக பின்பற்ற படுகிறது. அந்த காலத்தில் எல்லா வித நோய் பிணிகளையும் இதை வைத்துதான் குணமடைய செய்தனர். அந்த வகையில் இது நீரிழிவு நோய்க்கும் உதவுகிறது.

கொய்யா இலையும், சீரகமும்

பொதுவாகவே கொய்யாவில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. அதே போன்று இவற்றின் இலைகளிலும் பல ஆயர்வேத தன்மை மறைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

நாம் உணவில் அன்றாடம் சேர்த்து கொள்ளும் இந்த சிறிய சீரக விதைகளில் பல வகையான சத்துக்கள் உள்ளன.

செய்முறை

முதலில் கை நிறைய கொய்யா இலைகள் மற்றும் 3 கிராம் அளவு சீரகம் ஆகியவற்றை எடுத்து கொண்டு 1 கிளாஸ் நீரில் கொதிக்க விடவும்.

பிறகு இந்த நீரை வடிகட்டி கொள்ளவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் நீரிழிவு நோயிற்கு முற்றுப்புள்ளி வைத்து விடலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here