Educationtn.com

சென்னை, இன்ஜி., படிப்புகளில் சேர்வதற்கான, கவுன்சிலிங்கிற்கு விண்ணப்பிக்க, 42 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.தமிழகத்தில், பிளஸ் 2 முடித்து, இன்ஜினியரிங் சேர விரும்பும் மாணவ – மாணவியர், கவுன்சிலிங்கில் பங்கேற்க, ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, மே, 2 முதல், 31 வரை விண்ணப்பிக்கலாம்.ஆன்லைனில் விண்ணப்பிக்க வசதி இல்லாதவர்களுக்காக, அனைத்து மாவட்டங்களிலும், உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம், 42 உதவி மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. மாணவர்கள், அங்கு சென்று, ஆன் லைனில் விண்ணப்பிக்கலாம்.இது தொடர்பான விபரங்களுக்கு, www.tn.dte.gov.in இணையதளம், 044 – 2235 1014, 2235 1015 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here