சென்னை, அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடி இரண்டாம் ஆண்டு, டிப்ளமா படிப்பில் சேர, விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படுகின்றன.பிளஸ் 2 அல்லது 10 வகுப்பு மற்றும் இரண்டாண்டு ஐ.டி.ஐ., படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், 51 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேரடியாக இரண்டாம் ஆண்டு, டிப்ளமா படிப்பில் சேரலாம்.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள், சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் கல்லுாரிகளில், நேற்று முன்தினம் முதல் வழங்கப்படுகிறது. மே, 10 வரை, கல்லுாரி வேலை நாட்களில், தினமும் காலை, 10:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை, விண்ணப்பங்கள் வழங்கப்படும்.சென்னை, தரமணியில் உள்ள, மத்திய பாலிடெக்னிக் கல்லுாரியில், இரண்டரை ஆண்டு செயற்கை அவயங்கள் மற்றும் முடநீக்கியியல் டிப்ளமா படிப்பிற்கான, முதலாம் ஆண்டு சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. 
இதில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் சேரலாம்.தரமணியில் உள்ள, டாக்டர் தர்மாம்பாள் அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில், ஓராண்டு ஒப்பனைக் கலை, டிப்ளமா படிப்பு உள்ளது. இதில், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, மாணவியர் சேரலாம்.அனைத்து பாலிடெக்னிக் கல்லுாரிகளிலும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மே, 10க்குள் சமர்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம், 150 ரூபாய். எஸ்.சி., – எஸ்.டி., மாணவர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படும். அவர்கள் இலவசமாக விண்ணப்பம் பெற, ஜாதி சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here