டெட் தேர்வு பிரச்சினை
அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள். மாநிலத்தலைவர்
பி.கே.இளமாறன் அறிக்கை :
2011 ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை அரசு மற்றும் அரசு நிதி உதவிப்பெறும் பள்ளிகளில் 3000 க்கும் மேற்பட்டோர் பணிநியமனம் செய்யப்பட்டார்கள். அவ்வாறு பணிநியமனம் செய்யப்பட்டவரகள் 5 ஆண்டுகளில் 10 தடவை எழுதும் தேர்வுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு ( TET) எழுதித் தேர்ச்சிப்பெற வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டார்கள்.ஆனால் அரசு இதுவரை கடந்த 5 ஆண்டுகளில் மூன்றுமுறை மட்டுமே தேர்வு நடத்தப்பட்டுள்ளது.ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கு முழுமையான வாய்ப்பு வழங்கப்படாமல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப்பெறாத ஆசிரியர்களுக்கு அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதச்சம்பளம் பட்டியல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்கள்.எனவே ஆசிரியர் அறப்பணி அதனை அர்ப்பணி என்ற விதத்தில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கிட நடவடிக்கை எடுத்தும், ஏற்கனவே பணியிலிருக்கும் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும்படி தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
பி.கே.இளமாறன் மாநிலத்தலைவர்
98845 86716

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here