பள்ளி, கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, முகவரி சான்றாக, ரேஷன் கார்டு கேட்கப்படுவதால், புதிதாக விண்ணப்பித்தோருக்கு, கார்டை வழங்குமாறு, பயனாளிகள், தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழக ரேஷன் கடைகளில், மானிய விலையில், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன. அவற்றை வாங்க, ரேஷன் கார்டு அவசியம். அதை, உணவு வழங்கல் துறை வழங்குகிறது.ரேஷன் கார்டை, முகவரி சான்றுக்கு பயன்படுத்தக் கூடாது என, உணவு வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

ஆனால், வருவாய் துறை சார்பில் வழங்கப்படும், வருமான சான்று, ஜாதிச் சான்று போன்றவற்றிற்கு, ரேஷன் கார்டு கேட்கப்படுகிறது. இதனால், தனியார் சேவை நிறுவனங்களும், முகவரி சான்றுக்கு, ரேஷன் கார்டு கேட்கின்றன.ஏழு நாட்களுக்குள்தற்போது, மத்திய அரசின், ‘ஆதார்’ எண் அடிப்படையில், ‘ஸ்மார்ட்’ ரேஷன் கார்டு வழங்கப்படுவதால், விண்ணப்பித்த ஏழு நாட்களுக்குள் வழங்க வேண்டும். ஆனால், வழக்கம் போல், பல மாதங்களாகியும் தருவதில்லை.தமிழகத்தில், லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை, இந்திய தேர்தல் ஆணையம், மார்ச், 10ல் அறிவித்தது. அன்று முதல், தேர்தல் நடத்தை விதி, அமலுக்கு வந்ததது. இதனால், தேர்தல் முடியும் வரை பயனாளிகளுக்கு, புதிய ரேஷன் கார்டு வழங்கக் கூடாது என, அதிகாரிகளுக்கு, உணவுத் துறை உத்தரவிட்டது.அனுமதிஇது குறித்து, பயனாளிகள் கூறியதாவது:தேர்தல், இம்மாதம், 18ம் தேதி முடிவடைந்தது. ஓட்டு எண்ணிக்கை, நாடு முழுவதும், மே, 23ல் நடக்கிறது. அதுவரை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதாக, அதிகாரிகள் கூறுகின்றனர். 
தற்போது, பள்ளி, கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. அதற்கு, முகவரி சான்றாக, ரேஷன் கார்டை கேட்கின்றனர். இதனால், புதிய கார்டுக்கு விண்ணப்பித்தவர்களால், வழங்க முடியவில்லை.ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலுார் ஆகிய சட்டசபை தொகுதிகளில், மே, 19ல் இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தொகுதிகளில் வரும், துாத்துக்குடி, கரூர், மதுரை, கோவை வட்டங்கள் தவிர்த்து, மற்ற அனைத்து மாவட்டங்களிலும், தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று, விண்ணப்பித்தவர்களுக்கு, புதிய ரேஷன் கார்டை வழங்க, உணவுத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here