நம் முன்னோர் வாரம் 2, 3 நாட்கள் முடக்கத்தான் கீரை தோசை  சாப்பிடுவார்கள். இதனால்  மூட்டு வலி வராது.

முடக்கத்தான் கீரையைத் தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.

தோசை மாவிலும் முடக்கத்தான் கீரையைக் கலந்து தோசை செய்து சாப்பிடலாம். 

 நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும்.  வலியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

குப்பைமேனி இலையுடன் சதகுப்பை விதையை அவித்து சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைத்து பத்து போடலாம். வெங்காயத்தை, கடுகு  எண்ணெய் உடன் சேர்த்து அரைத்துப் பத்துப் போடலாம்.

ஊமத்தை இலை, நொச்சி இலை, சிற்றாமணக்கு இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கிக் கட்டலாம். பிரண்டையின் வேர்ப் பொடி,  முடக்கத்தான் இலைப் பொடி, தழுதாழை இலைப் பொடி, இவற்றைச் சம அளவு கலந்து, அரை ஸ்பூன் மிளகுத் தூளுடன் பாலில் சேர்த்து  அருந்தலாம்.

சிற்றாமுட்டி, சுக்கை கைப்பிடி அளவு எடுத்து, நான்கு டம்ளர் நீர் சேர்த்து ஒரு டம்ளராக வற்ற வைத்து 30 மில்லி அருந்தலாம். ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளைக் கால் கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்துப் பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட மூட்டு வலி எளிதில் நீங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here