சென்னை, தேர்தல் பணியின்போது இறக்கும், ஊழியர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தல் பணியின்போது இறக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு, 10 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. இந்த நிவாரண தொகை, தற்போது, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.தேர்தல் பணியின்போது, பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட, 20 லட்சம் ரூபாய் நிவாரணம், 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுஉள்ளது.பலத்த காயமடைவோருக்கு வழங்கப்பட்ட, ௫ லட்சம் ரூபாய் நிவாரணம், தற்போது, 7.5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை, தேர்தல் ஆணையம் பிறப்பித்துஉள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here