பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2019

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2019 பட்டியலில் முதல் 100 இடங்களில் தமிழ்நாட்டினைச் சார்ந்த 21 கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

மத்திய அரசு இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களை தரவரிசை செய்து 08.04.2019 அன்று பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்திய கல்வி நிறுவனங்களின் தரத்தினை சர்வதேச அளவில் உயர்த்துவதே இதன் நோக்கம் ஆகும்.

கல்வி நிறுவனங்கள் ஆய்வு செய்யப்பட்டு 100-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகின்றன என்ற அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் தரவரிசை தயார் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு வருகிறது.

2019-ஆம் வெளியிடப்பட்ட பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை பட்டியலில் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 89.05 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 63.12 மதிப்பெண்கள் பெற்று தமிழக அளவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசை 2019

வரிசை எண் பெயர் மதிப்பெண் இடம்
1 இந்திய தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 89.05 1
2 அண்ணா பல்கலைக்கழகம், சென்னை 63.12 9
3 தேசிய தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி 61.62 10
4 வேலூர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி, வேலூர் 56.46 18
5 எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 48.95 36
6 ஸ்ரீ சிவசுப்பிரமணிய நாடார் பொறியியல் கல்லூரி, காஞ்சிபுரம் 48.94 37
7 சண்முகா கலை, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அகாடமி (சாஸ்திரா), தஞ்சாவூர் 48.83 38
8 பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர் 47.28 44
9 சத்திய பாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், சென்னை 46.07 47
10 தியாகராஜர் தொழில்நுட்பக் கல்லூரி, மதுரை 43.38 56
11 கலசலிங்கம் ஆராய்ச்சி மற்றும் உயர்கல்வி அகாடமி, ஸ்ரீவில்லிபுத்தூர் 41.26 61
12 கோயம்புத்தூர் தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர் 40.10 68
13 காருண்யா அறிவியல் தொழில்நுட்ப நிறுவனம், கோயம்புத்தூர் 39.37 72
14 குமரகுரு தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர் 38.55 77
15 வேல்டெக் ரங்கராஜன், டாக்டர் சகுந்தலா அறிவியல் & தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், சென்னை 37.22 86
16 மெப்கோ ஸ்லங்க் பொறியியல் கல்லூரி, சிவகாசி 36.92 88
17 அரசினர் தொழில்நுட்ப கல்லூரி, கோயம்புத்தூர் 36.42 90
18 இந்துஸ்தான் தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் நிறுவனம், சென்னை 36.11  95
19 ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர் 35.97 97
20 பண்ணாரி அம்மன் தொழில்நுட்ப நிறுவனம், சத்தியமங்கலம் 35.90 98
21  கொங்கு பொறியியல் கல்லூரி, பெருந்துறை 35.89 99

 

இந்திய அளவில் தமிழக பொறியியல் கல்லூரிகள் நல்ல தரவரிசையைப் பெற்றுள்ளன.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here