தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், டிரக்ஸ் இன்ஸ்பெக்டர், ஜூனியர் அனலிஸ்ட் பணிக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. டிரக்ஸ் இன்ஸ்பெக்டர் பணிக்கு 40 பேரும், ஜூனியர் அனலிஸ்ட் பணிக்கு 9 பேரும் தேர்வு செய்யப் படுகிறார்கள்.

30 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். பார்மசி, பார்மசூட்டிகல் கெமிஸ்ட்ரி, கெமிஸ்ட்ரி மற்றும் குறிப்பிட்ட பிரிவில் பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். மே 12-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் 23-ந் தேதி நடக்கிறது.

இது பற்றிய விரிவான விவரங்களை http://www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here