இன்று முதல் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

RTE – 25% Application Form

குழந்தைக்களுக்கான இலவச மற்றும்  கட்டாயக்கல்வி உரிமைச்சட்டம் – 2009-ன் படி ஆண்டுத்தோறும் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் தமிழக அரசு சார்பில் இணையதள வழியில் விண்ணப்பங்களை தமிழக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் பெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2019-2020 ஆண்டுக்கான ஆன்லைன் விண்ணப்பம் இன்று (22/04/2019) தொடங்குகிறது. இதற்கான இணையதள முகவரி : http://tnmatricschools.com/rte/rtehome.aspx , http://www.dge.tn.gov.in/  இதில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் (Right To Education-2009) மூலம் குழந்தைகளை பள்ளியில் இலவசமாக சேர்க்கலாம்.
அதே போல் பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு பாடப்புத்தகம் , சீருடைகள் , பேருந்து வசதி உட்பட அனைத்தும் LKG முதல் 8th வகுப்பு வரை முற்றிலும் இலவசமாகும். எந்தவித கல்வி கட்டணத்தையும் குழந்தைகளின் பெற்றோர்கள் செலுத்த தேவையில்லை. விண்ணப்பிக்க கடைசி நாள் : 18/05/2019. இதற்கென தமிழக அரசுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :
1. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.
2. குழந்தையின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்.
3. குழந்தையின் பிறப்பு சான்றிதழ்.
4. குழந்தையின் ஆதார் அட்டை.
5. குழந்தையின் சாதி சான்றிதழ்.
6. தந்தையின் வருமான சான்றிதழ்.
7. தந்தை மற்றும் தாய் ஆதார் அட்டை.
8. குழந்தையின் இருப்பிட சான்றிதழ்.
தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர மற்ற அனைத்து மெட்ரிக் பள்ளிகளும் கட்டாயம் 25% இட ஒதுக்கீட்டை குழந்தைகளுக்கு அளிக்க வேண்டும். குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் இல்லத்தில் இருந்து சுமார் 1KM முதல் 3KM வரை உள்ள பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here