பொதுவாக பூக்களுக்கு மணம் உண்டு. சில செடிகளின் இலைகளுக்கும் மணம் உண்டு. அப்படியொரு சிறப்புப் பெற்றது திருநீற்றுப் பச்சிலை. உருத்திரசடை,  பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களில் இவை அழைக்கப்படுகிறது.

வாந்தி மற்றும் ரத்த வாந்தி, கப வாந்திக்கு மிகவும் பயன்படக்கூடிய மூலிகை இது. இந்தப் பச்சிலையின் சாறெடுத்து சுடுநீரில் கலந்து கொடுக்கலாம். கஷாயம் செய்தும் கொடுக்கலாம்.

முகம் போன்ற பகுதிகளில் விஷத் தன்மை வாய்ந்த பருக்கள் தோன்றுவதைக் கண்டிருப்பீர்கள். இந்த விஷப் பருக்களை தெரிந்தோ, தெரியாமலோ நகத்தால்  கிள்ளிவிட்டால் அது புரையோடி சீழ் வைத்து சில சமயங்களில் உயிராபத்தைக் கூட ஏற்படுத்தி விடும்.

இத்தகைய விஷப் பருக்கள் தோன்றினால் யாரும் கவலைப் படத் தேவையில்லை. திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி சாறெடுத்து அந்தச் சாற்றோடு வசம்பு  எனப்படும் கடைச் சரக்கை வைத்து நன்கு அரைத்து விஷப் பருக்கள் மீது மூன்று வேலை தடவினால் போதும், பரு காய்ந்து கொட்டிவிடும்.

நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாவதுடன், மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும். 

இலைச்சாறுடன் சம அளவு தேன் கலந்து சாப்பிட்டால் மார்புவலி, இருமல், வயிற்று வாயு பிரச்னைகள் சரியாகும்.

திருநீற்றுப் பச்சிலையின் இலையை மென்று சாப்பிட்டால் வாய்வேக்காடு சரியாகும். தேள் கடிப்பதால் வலி ஏற்படும்போது அதன் கடிவாயில் இந்த இலையை கசக்கி பூசினால் வலி குறையும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

1 COMMENT

  1. நான் சிறுவனாய் இருந்த சமயம் கடும் வயிற்று வலியால் அவதிபடும் சமயம் எங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள வயதான தாத்தா ஒருவர் துன்னுத்திப் பச்சிலை எனப்படும் இந்த வகை பச்சிலையசாரெடுத்து உள்ளுக்குள் சாப்பிட சரியாய் போனது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here