பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் 1-ந்தேதி முதல் 19-ந்தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ-மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினார்கள்.

கடந்த ஆண்டு வரை 1,200 மதிப்பெண்களுக்கு நடந்த தேர்வு, இந்த ஆண்டு முதல் 600 மதிப்பெண்களாக குறைக்கப்பட்டது. அதனால் மொழிப்பாடங்கள் முதல் தாள் 2-ம் தாள் என்று நடத்தப்படாமல் ஒரே தாள் தேர்வாக நடத்தப்பட்டது.

புதிய நடைமுறையில் (600 மதிப்பெண்) 8 லட்சத்து 61 ஆயிரத்து 107 மாணவ-மாணவிகளும் பழைய நடைமுறையில் (1,200 மதிப்பெண்) 25 ஆயிரத்து 741 தனித்தேர்வர்களும் பிளஸ்-2 தேர்வை எழுதினார்கள்.

மேலும் புதிய நடைமுறையில் 1,144 தனித்தேர்வர்களும் இந்தத் தேர்வை எழுதினர். தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கியது.

தமிழகம் முழுவதும் 70-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்ற விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 40 ஆயிரம் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்த பணிகள் நேற்றுடன் நிறைவடைந்தது.

இனி மாணவ-மாணவிகளின் மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மதிப்பெண் சான்றிதழ் அச்சடிக்கப்பட இருக்கிறது. இந்தப் பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டது போல இம்மாதம் 19-ந் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவை வெளியிட அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here