வாக்குப்பதிவு அலுவலர்களின் பணி*_

இந்த பகுதி வாக்குச்சாவடி அலுவலர்களின் பணியினை பற்றியது.

*வாக்குப்பதிவு அலுவலர் 1*

இவர் Marked copy of electoral roll க்கு பொறுப்பானவர்.

இந்த பணியோடு வாக்காளர்களை அடையாளம் காணும் பணியும் இவருடையது தான்.

ஒரு வாக்காளர் உள்ளே நுழைந்ததும் இவரைத்தான் அணுகுவர்.

தேர்தல் ஆணையம் வாக்காளர் கொண்டு வரவேண்டிய ஆவணங்களில் ஒன்றினை அடையாளச் சான்றாக கொண்டு வருவதை சரிபார்க்க வேண்டும்.

*வாக்குப்பதிவு அலுவலர் 2*
இவர் அழியாதமைக்கு பொறுப்பானவர்.

இவர் முதல் அலுவலர் அடையாளத்தை உறுதி செய்தபின் இடது கை ஆட்காட்டி விரலில் மையிடுவார்.

அத்துடன் படிவம் 17A (Register of voters) ஐ  பராமரிக்கும் பணியும் இவருடையதே.

படிவம் 17A வில் உரிய பதிவுகள் செய்து வாக்காளரின் ஒப்பம் அல்லது இடது பெருவிரல் ரேகையினை அதில் பெறுவார்.

அடையாள மை வைத்த பின்னரே படிவம் 17A வில் பதிவுகளை மேற்கொள்ள வேண்டும்.

படிவம் 17A வில் பதிவுகளை செய்த பின் வாக்காளருக்கு Voters slip ஒன்றை  வழங்க வேண்டும்

அடையாள மை காய்வதற்கான நேரத்தினை எடுக்கவே இந்த நடைமுறை.

*வாக்குப்பதிவு அலுவலர் 3*

இவர் Control Unitக்கு பொறுப்பானவர்.

*இரண்டு தேர்தல்கள் நடைபெறும் இனங்களில்*

மூன்றாவது அலுவலர்  voters slip க்கும்,

நான்காவது அலுவலர் மக்களை தேர்தலுக்கான control Unit ற்கும்

ஐந்தாவது அலுவலர் சட்டமன்ற தேர்தலுக்கான Control unitற்கும் பொறுப்பானவர்களாக இருப்பார்கள்.

*_தேர்தல் பணிகளை விரும்பிச் செய்வோம்.._*

*_தேர்தல் விதிகளை விளங்கச் சொல்வோம்.._*

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here