கோவை மாவட்டத்தில் தேர்தல் பணியில் உள்ள 14,700க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டு சீட்ட வழங்கப்பட்டது. இன்று முதல் மாவட்ட அளவில், 10 சட்டமன்ற ெதாகுதிக்குட்பட்ட பகுதியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் தபால் ஓட்டு போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேர்தல் தொடர்பு அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தபால் ஓட்டு சீட்டு வாங்கி அலுவலர்கள் பலருக்கு படிவம் பூர்த்தி ெசய்வது என தெரியவில்லை. நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தபால் ஓட்டு பிரிவில் உள்ள தொடர்பு அலுவலர் அலுவலகத்தில், ஓட்டு சீட்டு பூர்த்தி செய்வது எப்படி என தெரிந்து கொள்ள தேர்தல் பணியில் உள்ள அலுவலர்கள் குவிந்தனர்.

அவர்களுக்கு படிவம் பூர்த்தி செய்வது குறித்து விளக்கம் தரப்பட்டது.

நூற்றுக்கணக்கான அலுவலர்கள் குவிந்ததால், அதிகாரிகள் திணறினர். இந்நிலையில், இன்று நடக்கும் பயிற்சி வகுப்பின் இறுதியில் தபால் ஓட்டு சீட்டு பதிவு செய்வது குறித்து விளக்கமளிக்கப்படும். பயிற்சி முடிந்த பின்னர், பெட்டியில் ஓட்டு போடலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். தவறாக பூர்த்தி செய்யப்படும் தபால் ஓட்டுக்கள் எண்ணிக்கையின் போது செல்லாத ஓட்டாக நீக்கம் செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் 30 சதவீதத்திற்கும் மேற்பட்ட தபால் ஓட்டுக்கள் செல்லாத ஓட்டாக நீக்கப்பட்டது. வரும் தேர்தலில் செல்லாத ஓட்டுக்களின் எண்ணிக்கையை தவிர்க்க அலுவலர்களுக்கு படிவம் எழுத தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here