ஜீரண தன்மையை தூண்டக்கூடிய சக்தி வாய்ந்த பானத்தை, குளிர்ந்த நீரில் நாட்டு சர்க்கரை கலந்து, ஏலக்காய், கற்பூரம், கிராம்பு, மிளகு கலந்து செய்யப்படுகிறது. உடலுக்கு, நல்ல வலுவூட்டக் கூடிய பானகம் தாயாரிக்க நீரில் மாங்காயை வேகவைத்து, பின்னர் நன்றாக பிசைந்து அதனை பானத்துடன் கலந்து பருக வேண்டும்.

வாதத்தை பெருக்கி, ஜீரணத்தை தூண்டும் பானகத்தை தயாரிக்க, பானத்துடன் ஊற வைத்த புளிச்சாற்றை, கலந்து பருக வேண்டும். பித்தத்தை தூண்டி, ஜீரண சக்தியை அதிகப்படுத்த, பானகத்துடன் மல்லிகை இலையை அரைத்து, அதன் சாற்றை சேர்த்து குடிக்க வேண்டும்.

பானகம் தயாரிக்கும் முறை:

புளி -சிறு எலுமிச்சையளவு

வெல்லம் – சுவைக்கேற்ப‌

சுக்குப்பொடி – 1/4 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி- 1/4 டீஸ்பூன்

மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன் அல்லது

வரமிளகாய்- இரண்டு

தண்ணீர் – 2 கப் செய்முறை :

புளியை, தண்ணீரில் ஊறவைத்து, நன்றாக கரைத்து, சாறு எடுத்துக்கொள்ள வேண்டும், அதனுடன், வெல்லம், சுக்குப்பொடி, ஏலக்காய் பொடி மற்றும் மிளகு தூள் அல்லது வர மிள‌காயை கிள்ளிப்போட வேண்டும். பின்னர் சிறிது நேரம் மண் பானையில் வைத்து பருகினால், கோடை காலத்தில் ஏற்படும் உடல் உபாதைகளிலிருந்து காக்க உதவும்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here