*ஆண்டுவிழாவில் 200 மரக்கன்றுகளை பள்ளிக்கு வழங்கிய முன்னாள் மாணவர்கள்*

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஒன்றியத்தைச் சேர்ந்த வெள்ளோடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப் பட்டன . தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழாவிற்கு வருகை புரிந்த அனைவரையும் பள்ளியின் இடைநிலை ஆசிரியை திருமதி கொ. ஆஷாகுட்டி வரவேற்றார். பள்ளியின் பள்ளி மேலாண்மை குழு கல்வியாளர் திரு ந.சண்முகசுந்தரம் அவர்கள் விழாவினை தலைமையேற்று நடத்தினார். திருமதி தவமணி ஆசிரியை ஆண்டறிக்கை வாசித்தார் .பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர்கள் திரு வே. த. இராசகோபால்,திரு வே.ம. பெரியசாமி,திரு ம. பொன்மணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினர். விழாவில் பெற்றோர்கள் ஊர் பொதுமக்கள் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பள்ளியின் பணி நிறைவு பெற்ற சத்துணவு அமைப்பாளர் திரு மணி அவர்களுக்கு பாராட்டும் நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது இலக்கியமன்ற மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன .மரம் வளர்ப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பாக பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் 200 மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. மாணவர்கள் செய்து காண்பித்த பிரமிடு அனைவரையும் கவர்ந்தது. டெங்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாணவி பாடிய பாடல் அனைவரின் வரவேற்பையும் பெற்றது.

பல்வேறு நன்கொடையாளர்களிடம் இருந்து மாணவர்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு கருவி, முதல் வகுப்பு மாணவர்களுக்கு வண்ண நாற்காலிகள், பள்ளி அலுவலகத்திற்கு கணினி மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைக்கு தேவையான ப்ரொஜெக்டர், மாணவர்களுக்கு சேமிப்பின் அவசியத்தை உணர்த்துவதற்காகவே ஒவ்வொரு மாணவருக்கும் உண்டியல்,
தேசத் தலைவர்களின் படங்கள்,
மரக்கன்றுகள் ஆகியவை நன்கொடையாக பெறப்பட்டன. மேலும் 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான செலவினங்களை ஆண்டுவிழா நிகழ்வு சிறக்கவும் கொடையாளர்கள் வழங்கி பள்ளியை ஊக்கப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.
விழாமுடிவில் தலைமையாசிரியர் திருமதி. தனபாக்கியம் நன்றி கூறினார்.

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here