தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன. அரிசி, கோதுமை, வரகு, கம்பு, சாமை போன்ற தானியங்களை சமைத்து உண்பதின் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். கொழுப்புச்சத்து குறையும். உடல் பருமன் ஏற்படாது. கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு, தினை, பனிவரகு போன்றவை சிறுதானியங்கள் ஆகும்.

கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடுபவர்கள் இருக்கின்றனர். அதனால்தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல்பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை. ஆண்மைக்கு சாமை உணவு ஏற்றது. அனைத்து வயதினரும் உண்ணலாம். மலச்சிக்கலை போக்கும். வயிறு சம்பந்தமான நோய்களை கட்டுப்படுத்தும், ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது. நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம். தினையில் உடலுக்குத் தேவையான புரதசத்துக்களும், ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

ஜன்னி, ஜூரம், வலிப்பு நோய் போன்றவற்றை போக்கும். பசியை உண்டாக்கும். பனிவரகு புரதச்சத்து மிகுந்த ஒரு தானியம். சிறுதானியங்களை பயிராக்க அதிக தண்ணீர் தேவையில்லை. உரமோ, பூச்சிக்கொல்லியோ ஒரு போதும் தேவையில்லை. இப்படி இன்னமும் இயற்கையோடு இணைந்து நமக்கு பசியாற்றும் போதே நோயை குணமாக்குவது இந்த சிறுதானியங்கள்தான். தினையின் பீட்டாகரோட்டின் சத்து கண்பார்வையை சீராக வைத்திருக்க உதவும். கோடையில் கம்பங்கூழ் வெங்காயத்துடன் சாப்பிடுவது இரும்புச்சத்து கலந்த குளிர்பானம் அருந்துவது போன்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here