புதுக்கோட்டை மாவட்டத்தில் 52 பள்ளிகளில் அடைவு ஆய்வு தேர்வு : மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் இரா.வனஜா தகவல்

புதுக்கோட்டை,மார்ச்.28: புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில் அடைவு ஆய்வு தேர்வு வியாழக்கிழமை நடைபெற்றது..

புதுக்கோட்டை டி.இ.எல்.சி.பள்ளியில் நடைபெற்ற அடைவு ஆய்வு தேர்வினை பார்வையிட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா கூறியதாவது: தமிழகம் முழுவதும் மாணவர்களின் கல்வித் திறனை ஆய்வு செய்யும் வகையில் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவு ஆய்வு தேர்வு நடைபெற்று வருகிறது.அதே போல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அடைவு
ஆய்வுத் தேர்வானது தேர்வு செய்யப்பட்ட 9 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு ஒன்றியத்திற்கு 4 பள்ளிகள் வீதம் மாவட்டம் முழுவதும் 52 பள்ளிகளில் நடைபெற்றது.
அடைவுஆய்வுத் தேர்வின போது ஒஎம்ஆர் படிவத்தில் மாணவர் மற்றும் பள்ளி சார்ந்த விவரங்களை சம்பந்தப்பட்ட ஆய்வாளர்கள் ஒவ்வொரு மாணவர்களுக்கும் பூர்த்தி செய்து கொடுப்பார்கள்.
வினாவிற்கான விடையை மாணவர்கள் மட்டும் பூர்த்தி செய்வார்கள்.ஆய்வுத் தேர்வானது காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை நடைபெறும்.
ஆய்வுப் பணியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆசிரிய பயிற்றுநர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

ஆய்வின் போது மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சி.பழனிவேலு உடன் இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here