ஒண்டி குப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி பள்ளி ஆண்டுவிழா 2018 2019 மார்ச் மாதம் 27 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளதால் ஆசிரியர்கள் ஆசிரியர் நண்பர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் ஊர் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தரும்படி கேட்டுக்கொள்கிறேன்…

பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகை தரும் சிறப்பு விருந்தினர் நமது கடம்பத்தூர் ஒன்றிய வட்டார கல்வி அலுவலர் திருமதி பா.கிரிஜா மேடம் அவர்களையும் வட்டார கல்வி அலுவலர் திரு.க. ரகுபதி அய்யா அவர்களையும் வருக வருக என வரவேற்கிறோம்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் முதல் முறையாக மாணவர்களுக்கு ஆண்டுவிழாவில் கியூ ஆர் கோடு பாராட்டுச் சான்றிதழ்
*QR CODE CERTIFICATES* வழங்குவதில் மிகவும் பெருமை கொள்கிறோம்

வெற்றி பெற்ற சாதனையாளர்கள் பற்றிய உணர்வுகள் மாணவர்கள் மனதில் நீங்காமல் தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் வழிநடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சாதனையாளர்களின் பெயரில் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது

1. தமிழில் சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு திருவள்ளுவர் விருது பாரதியார் விருது வழங்கப்பட உள்ளது

2. கணிதத்தில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு கணித மேதை ராமானுஜர் அவர்களின் விருது வழங்கப்பட உள்ளது

3.அறிவியல் பாடத்தில் அறிவியல் உணர்வுகள் உள்ள மாணவர்களுக்கு அறிவியல் சோதனைகளில் அதிக ஈடுபாடு கொண்ட மாணவர்களுக்கு சர்சிவி ராமன் அவர்களின் விருது வழங்கப்பட உள்ளது

4.சமூக அறிவியல் வானவியல் போன்ற பிரிவுகளில் சிறந்து விளங்கும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் ஐயா அவர்களின் விருது வழங்கப்பட்டிருக்கிறது

5.சிறந்த சேவை மனப்பான்மை உடைய மாணவர்களுக்கு அன்னை தெரசா விருது அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது

6.பள்ளிகளில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் .

பள்ளி என்பது நமது குடும்பம் போன்ற உணர்வினை மாணவர்கள் மத்தியிலும் ஏற்பட வேண்டும், பிறருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு தோன்ற வேண்டும் என்ற எண்ணத்திலும் மாணவர்களுக்கு சிறந்த நன்கொடையாளர் விருது ஒன்றை வழங்கி மாணவர்களை பிறருக்கு உதவும் மனப்பான்மை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக சிறந்த நன்கொடையாளர் விருது வழங்கப்படுகிறது

7.பள்ளியில் சதுரங்க விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு சதுரங்க போட்டியில் சாதனையாளரான விஸ்வநாதன் ஆனந்த் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது

8.பள்ளி செயல்பாடுகளில் அனைத்து நிலைகளிலும் சிறந்து விளங்கும் மாணவர் ஒருவரை தேர்ந்தெடுத்து சிறந்த மாணவர் என்ற விருது ஒவ்வொரு வகுப்பிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது

9.நமது இந்திய கிரிக்கெட் அணியை சரியான முறையில் தலைமையேற்று நடத்திச் சென்று சாதனையின் உச்சியில் நிற்கச் செய்து சாதனை படைக்க செய்த திரு மகேந்திரசிங் தோனி அவர்களின் பெருமைப்படுத்தும் விதத்தில் நம் பள்ளியில் நமது சமூகத்தில் சிறப்பாக வழிநடத்திச் சென்று இளைஞர்களையும் பள்ளி மாணவர்களையும் நாட்டு மக்களையும் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்லும் மாணவர்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நமது பள்ளியில் சிறந்து விளங்கும் மாணவர்களை மகேந்திர சிங் தோனி அவர்கள் விருது வழங்கி கவுரவிக்கிறோம்……

அரசுப் பள்ளிகளை உயர்த்துவோம்..

சான்றிதழ் தயாரிப்பு மற்றும் அன்பளிப்பு
👇👇👇👇👇👇👇

🌈📡🔬🛶⏳☂️🔭♻️
*இரா.கோபிநாத்*
இடைநிலை ஆசிரியர்
9578141313
*கடம்பத்தூர் ஒன்றியம்*
*திருவள்ளூர் மாவட்டம்*

அரசுப்பள்ளி களை தரம் உயர்த்துவோம்

💪💪💪💪💪💪💪🙏🙏🎉🎉🎉🎉🎉🎉🎉

👉 Join our Whatsapp Group

👉 Join our Youtube Channel

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here