கடலுார்:டேராடூனில் உள்ள ராஷ்டீரிய இந்திய ராணுவ கல்லுாரியில் வரும் ஜனவரியில் துவங்கும் வகுப்புகளுக்கு 8 ம் வகுப்பிற்கான சேர்க்கைக்கான தகுதி தேர்வு வரும் ஜூன் மாதம் 1 ம் தேதி மற்றும் 2 ம் தேதி நடக்கிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள அறிக்கை;டேராடூனில் உள்ள ராஷ்டீரிய இந்திய ராணுவ கல்லுாரியில் 2020ம் ஆண்டு துவங்கும் 8ம் வகுப்பு சேர்க்கைக்கான தகுதி தேர்வு, ஜூன் மாதம் 1ம் தேதி மற்றும் 2 ம் தேதி நடக்கிறது. ஏழாம் வகுப்பு தேறிய அல்லது ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும், 2.1. 2007 க்கும் 1.7.2008ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் பிறந்த ஆண் குழந்தைகள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விளக்கவுரை மற்றும் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட தேர்வுகளின் கேள்வித்தாள்களை கட்டணம் செலுத்தி, எழுத்து மூலமாக விண்ணப்பம் செய்து பெற்றுக்கொள்ளலாம். விலாசம் ஆங்கிலத்தில் பெரிய எழுத்துகளில் எழுதியிருத்தல் வேண்டும்.கட்டணம் The commandant, Rashtriya Indian Military College, Dehradun, Uttarakhand State. 248 003 என்ற முகவரிக்கு தனிநபர் விண்ணப்பத்துடன் அனுப்புதல் வேண்டும். தனியாக அச்சடிக்கப்பட்ட அல்லது நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். 
விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினருக்கு விரைவுத் தபாலில் பெற ரூ.600, எஸ்.சி., மற்றும் எஸ்.டி., பிரிவினர் ரூ.555 ஆகும். ஜாதிச்சான்றுடன் மேற்கண்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்ப படிவம், பிற விவரங்கள் மற்றும் முந்தைய ஆண்டு தேர்வுகளின் விடைத்தாள்களையும் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு Controller of Examinations, Tamilnadu [Public Service Commission, Chennai – 600 003 என்ற முகவரிக்கு வரும் 31 ம் தேதிக்குள் சேரத்தக்க வகையில் அனுப்பி வைக்க வேண்டும். எழுத்து தேர்வு ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத இயலும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here