ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அன்றாடம் உடற்பயிற்சி செய்வது, முறையான டயட்டை பின்பற்றுவதும் முக்கியம்

அன்றாடம் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம்

ஹைலைட்ஸ்

  • நார்ச்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்
  • போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்
  • சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிடுங்கள்

சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய சர்க்கரையின் அளவை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு 180 எம்.ஜி-க்கு மேல் அதிகரிக்கும் பொழுது அதனை சர்க்கரை நோயாக மாறுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவு அதிகரிப்பது ஆபத்தானது. சர்க்கரை நோய் பார்வைத்திறனை பாதிக்கலாம், சிறுநீரகம் பழுதடையலாம், ஹார்ட் அட்டாக வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையும் அன்றாடம் உடற்பயிற்சி  செய்வது, முறையான டயட்டை பின்பற்றுவதும் முக்கியம். 

சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள சில வாழ்க்கை முறை டிப்ஸ்களை பார்க்கலாமா… 

1. சர்க்கரை அளவை பரிசோதித்தல்:

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை 200 எம்.ஜியைத் தொடும் வரை எந்தவொரு அறிகுறியும் தெரிவதில்லை. நீரிழிவு நோய் உள்ளவர்கள் தொடர்ந்து அடிக்கடி சர்க்கரை அளவு பரிசோதித்து பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். வீட்டிலே இதை பரிசோதிக்க தற்போது குளுக்கோஸ் மானிட்டர்கள் தற்போது விற்பனையாகின்றன. 

1sjbloeg

2. அன்றாடம் உடற்பயிற்சி:

அன்றாடம் உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சி இன்சுலின் சுரப்பை அதிகப்படுத்துகிறது. உடல் எடை குறையவும் வழிவகுக்கிறது. உடற்பயிற்சி செய்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையை தசைகள் சக்தியாக மாற்றுகிறது. நடைப் பயிற்சி, நடனம், ஹைக்கிங், சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் போன்ற உடற்பயிற்சிகளை அன்றாடம் செய்து வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். 

3. கார்போஹைட் ரேட் மீதுகவனம் செலுத்துங்கள்:

நாம் சாப்பிடும் கார்ப்போஹைட் ரேட் தான் சர்க்கரையாக மாறி உடலுக்கு சக்தியளிக்கிறது. உடலுக்கு கார்ப்போஹைட் ரேட் அவசியமாக இருந்தாலும் சர்க்கரையின் அளவை அதிகரித்து விடக்கூடாது. சர்க்கரை அளவு அதிகரிக்க கார்போஹைட் ரேட்டும் ஒரு காரணம். சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட் ரேட் உணவான பிரட், பாஸ்தா, பீட்ஷா, பர்கர், போன்ற பேக்கேஜ் உணவுகளை தவிர்ப்பது நலம். 

4. போதுமான அளவு தண்ணீர் குடியுங்கள்:

உடலில் தண்ணீரின் அளவு வற்றாமல் இருக்க போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். அதிகளவு தண்ணீர் குடித்தால் சர்க்கரை சிறுநீராக வெளியேறிவிடும். 

5. க்ளைசெமிக் இண்டெக்ஸ் குறைவான உணவையே எடுத்துக் கொள்ளுங்கள்: பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, திணை, இறைச்சி, ஸ்டார்ச் குறைவான உணவுகள், மீன், நட்ஸ், விதைகள் ஆகியவற்றில் க்ளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ளது. இவற்றை டயட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

 6.  உணவின் அளவைக் கவனம்:

உடல் எடையை  குறைக்க உணவின் அளவில் கவனம் கொள்ளுங்கள். உடல் எடை குறையும். சர்க்கரையின் அளவும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டும். சின்ன ப்ளேட்டில் வைத்து சாப்பிடுங்கள், மெதுவாகவும் உணவில் கவனம் செலுத்தி சாப்பிடுங்கள். 

7. நார்ச்சத்து உள்ள உணவுகளை சாப்பிடுங்கள்:

நார்ச்சத்து உள்ள உணவுகள் சர்க்கரையின் அளவைக் குறைக்கும். நார்ச்சத்துகள் கார்போஹைட் ரேட்டின் அளவை குறைக்கிறது. சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க உதவும். முழு தானியங்கள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here