கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 26, 27ம் தேதி நடக்க உள்ளது.  டிஎன்பிஎஸ்சி தொகுதி 4-இல் அடங்கிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு கடந்தாண்டு பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்தப்பட்டது.    அதற்கான தோ்வு முடிவுகள் (தரவரிசைப் பட்டியல்) ஜூலை 30-ல் வெளியிட்டது.    அதனைத் தொடா்ந்து தரவரிசை மற்றும் இனசுழற்சி அடிப்படையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரா்களின் விவரங்களும் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.   இதையடுத்த சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர், தற்போது இரண்டாம் கட்ட கலந்தாய்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.    அதன்படி, வரும் 26 மற்றும் 27ம் தேதியில் விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.   சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஆகியவற்றில் பங்கேற்காதவர்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்றும் மறுவாய்ப்பு எதுவும் வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.    இது தொடர்பான முழுமையான விபரங்களை டிஎன்பிஎஸ்சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் www.tnpsc.gov.in தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here